For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் பயங்கரம்.. நூறு அடி பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 11 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

Google Oneindia Tamil News

பூஞ்ச்: காஷ்மீரில் நூறு அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பனிமூட்டம் அடர்ந்து காணப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

11 people killed in Kashmir as Bus fell into gorge

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சயுஜியான் பகுதியில் இருந்து மண்டி நோக்கி இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 20 பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில், பரேரி நல்லா மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த நூறு அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராணுவத்தினருக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில், அங்கு வந்த ராணுவத்தினர், மலைப்பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கி காயமடைந்தவர்களை மீட்டனர். இவர்களில் 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பனிமூட்டம் அதிகமாக இருந்ததே இந்த விபத்து ஏற்பட காரணம் எனத் தெரியவந்தது.

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்" எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணி மீதான ரெய்டில் 32.98 லட்சம்.. 1.2 கிலோ தங்கம்.. சிக்கிய 312 ஆவணங்கள்.. பரபர அறிக்கை! எஸ்.பி.வேலுமணி மீதான ரெய்டில் 32.98 லட்சம்.. 1.2 கிலோ தங்கம்.. சிக்கிய 312 ஆவணங்கள்.. பரபர அறிக்கை!

English summary
11 people killed and 8 more injured as a bus fell into gorge in poonch in Jammu Kashmir. Several people among injured are in critical condition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X