காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் தமிழக வீரர் இளையராஜா வீரமரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் இளையராஜா வீரமரணமடைந்தார்.

காஷ்மீரின் சைனபோரா பகுதியில் அவ்னீரா கிராமத்தில் தீவிரவாதிகள் ஆயுதங்களோடு மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

2 soldiers killed after overnight gun battle in Kashmir

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவத்தினருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை மற்ற வீரர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் தமிழக வீரர் இளையராஜாவும் ஒருவர். சிவகங்கை மாவட்டம் கந்தணியை சேர்ந்தவர் ராணுவ வீரர் இளையராஜா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police officials said 3 militants and 2 soldiers were killed in Kashmir Shopian district Yesterday.
Please Wait while comments are loading...