மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எம்எல்ஏக்களை நியமித்தது தவறு.. முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: யூனியன் பிரதேச விதிக்கு கட்டுப்பட்டு கிரண்பேடி செயல்பட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆளுநருக்கு எந்த தனிப்பட்ட அதிகாரமும் கிடையாது. யூனியன் பிரதேச மாநில நிர்வாகத்துக்கு ஆளுநர் அறிவுரை வழங்கலாம். ஆனால் தனிப்பட்ட முடிவு எடுக்க கிரண்பேடிக்கு எந்த அதிகாரமும் இல்லை.

மாநில அரசு பரிந்துரைப்படியே நியமனம்

மாநில அரசு பரிந்துரைப்படியே நியமனம்

நியமன உறுப்பினர்கள் குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இது தொடர்பான கோப்பு நிர்வாகிகள் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இதுவரை 5 முறை

இதுவரை 5 முறை

இதுவரை சுமார் 5 முறை நியமன உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக, ரங்கசாமி முதல்வராக இருந்த போது உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

விதிமுறைப்படியும், சட்டப்படியும், வழக்கப்படியும் நியமன உறுப்பினர்கள் குறித்து முதல்வர், அமைச்சர்களும் முடிவு செய்து ஆளுநர் மூலமாக கோப்பை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

அவசரக் கோலத்தில்…

அவசரக் கோலத்தில்…

இதுதான் நியமன முறை. ஆனால் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்று 3 பேரை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்தவர்கள் என்று நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
State government has right to appoint MLA, says Puducherry CM Narayanasamy
Please Wait while comments are loading...