ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் 39 லிட்டர் வெளிநாட்டு சரக்கு பறிமுதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பெண் ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் 39 லிட்டர் வெளிநாட்டு சரக்கு பறிமுதல்!- வீடியோ

  கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான பாரதி கோஷ் வீட்டில் 39 லிட்டர் வெளிநாட்டு சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி பாரதி கோஷ். இவர் பலரிடம் மிரட்டி பணம் பறிப்பதாக தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

  இதைத்தொடர்ந்து கொல்கத்தாவின் மதுர்தகா பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சிஐடி போலீசார் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
  இந்நிலையில் 8 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பல முக்கிய அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

   வெளிநாட்டு சரக்கு

  வெளிநாட்டு சரக்கு

  மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ஏராளமான ஆயுத உரிமங்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஏராளமானோரின் வேலைவாய்ப்பு சரிபார்ப்பு பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்காட்ச், ஜானி வால்கர், சிவாஸ் ரீகல் உள்ளிட்ட வெளிநாட்டு மதுவகைகள் சீல் செய்யப்பட்ட 57 பாட்டீல்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளார்.

   அரசியல் வட்டாரத்தில் பிரபலம்

  அரசியல் வட்டாரத்தில் பிரபலம்

  தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பல முக்கிய வீடியோக்களும் கிடைத்திருப்பதாகவும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளார். அதிகாரத்துவ மற்றும் அரசியல் வட்டாரங்களில் மிகவும் பிரபலமாவர் பாரதி கோஷ்.

   மமதாவுக்கு அருகிலும்

  மமதாவுக்கு அருகிலும்

  அவர் இரண்டு காரணங்களுக்காக பரவலாக விவாதிக்கப்பட்டிருக்கிறார். மாவோயிஸ்டுகள் அதிகாரமிக்க மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் எஸ்.பியாகவும், மிக முக்கியமாக, முதல்வர் மமதா பானர்ஜிக்கு அருகிலும் நீண்ட காலமாக அவர் பணியாற்றினார்.

   அம்மா என்று கூறிய கோஷ்

  அம்மா என்று கூறிய கோஷ்

  மமதா பானர்ஜி மீதான அவரது விசுவாசம் மற்றும் முதல்வர் மீதான அவரது பாசம் மிகவும் வெளிப்படையாக இருந்தது. மேற்கு மிட்னாபூரில் பொதுக்கூட்டத்தில் கோஷ் அவரை 'அம்மா' என்று கூறி உரையாற்றினார்.

   மமதாவுடன் பிளவு

  மமதாவுடன் பிளவு

  இருப்பினும், பல ஆண்டுகளாக கவனிக்கப்படாதது என்னவென்றால் முன்னாள் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் முகுல் ராயுடன் அவருக்கு "ஓரளவு நல்ல உறவு" இருந்தது. முகுல் ராய் பாஜகவுக்கு தாவியவுடன், கோஷ் மற்றும் மமதா இடையே பிளவு ஏற்பட்டது.

   கோஷ் தான் காரணம்

  கோஷ் தான் காரணம்

  அண்மையில் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள சபாங் சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிகளவு வாக்குகளை பெற்றது. இதற்கு ஐபிஎஸ் அதிகாரியான கோஷ் தான் காரணம் என்றும் முகுல் ராயுடன் அவருக்கு உள்ள அரசியல் சமன்பாடுகளே காரணம் என திரரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

   பதவி விலகல்

  பதவி விலகல்

  இதைத்தொடர்ந்து மம்தாவின் ஆதரவில் இருந்து கோஷ் வெளியேறினார். கோஷ் ஒரு குறைவாக குறிப்பிடும் பதவிக்கு மாற்றப்பட்டார். பதவிக்காக பேரம் பேசப்பட்ட போதும் அவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை மாநில அரசும் ஏற்றுக்கொண்டது.

   ரூ.2.5 கோடி கைப்பற்றல்

  ரூ.2.5 கோடி கைப்பற்றல்

  விஷயம் நல்லபடியாக சென்றாலும் கோஷ் பா.ஜ.க.வின் மத்திய தலைவர்களை சந்தித்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து திடீரென சிஐடி ஸ்கேனருக்கு வந்தார் கோஷ். இதில் கோஷின் நெருங்கிய உதவியாளரின் வீட்டில் ரூ. 2.5 கோடி ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டது.
  சோதனைகளைத் தொடர்ந்து, கோஷ் தான் ஒரு சதித்திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  At least 39 litres of imported liquor in 57 sealed bottles were seized from retired IPS officer Bharati Ghosh in Kolkatta yesterday. Bharati gosh was close to Mamata Banerjee.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற