For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறிய சோனியா மற்றும் 400 எம்.பிக்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்ட 401 எம்.பிக்கள் தங்களது சொத்துக் கணக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லை என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற ஒருவர், 90 நாட்களுக்குள் தனது சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சொத்து விதிகள்-2004 கூறுகிறது.

இந்நிலையில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விவரம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த கேள்விக்கு நாடாளுமன்ற செயலகம் பதில் அளித்திருக்கிறது. அதில், சோனியா காந்தி, ராஜ்நாத் சிங், அத்வானி உள்பட 401 எம்.பி.க்கள் சொத்து கணக்கை தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

209 பாஜகவினர்:

209 பாஜகவினர்:

இந்தப் பட்டியலில் முன்னிலை வகிப்பது பாஜகதான். அக்கட்சியைச் சேர்ந்த கணக்கு காட்டாத எம்.பிக்கள் எண்ணிக்கை 209 ஆகும்.

2வது இடத்தில் காங்கிரஸ்:

2வது இடத்தில் காங்கிரஸ்:

காங்கிரஸ் எம்.பிக்கள் எண்ணிக்கை 31 ஆகும். திரிணாமுல் காங்கிரஸ் - 27, பிஜூ ஜனதாதளம் - 18, சிவசேனா - 15, தெலுங்குதேசம் - 14.

அதிமுக 9:

அதிமுக 9:

அ.தி.மு.க. - 9, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி - 8, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - 7, லோக்ஜனசக்தி- 6, தேசியவாதகாங்கிரஸ் கட்சி - 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 4, சமாஜ்வாடி-4, அகாலிதளம் - 3, ராஸ்டீரிய ஜனதாதளம் - 3, ஆம் ஆத்மி கட்சி- 3, ஐக்கிய ஜனதாதளம் - 2, அப்னாதளம் - 2. ஆகும்.

மத்திய அமைச்சர்கள்:

மத்திய அமைச்சர்கள்:

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர்கள் விவரம்: ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், உமாபாரதி, நிதின் கட்காரி, ஹர்சவர்தன், ராதாமோகன் சிங், ஆனந்த் கீதே, அனந்த குமார், ராம்விலாஸ் பஸ்வான், உபேந்திர குஷ்வாகா, கிரண் ரிஜ்ஜூ, கல்ராஜ் மிஸ்ரா.

முக்கியத் தலைவர்கள்:

முக்கியத் தலைவர்கள்:

சொத்து கணக்கு தெரிவிக்காத எம்.பி.க்கள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், முலாயம் சிங் யாதவின் மருமகள் டிம்பிள் யாதவ், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் தேவே கவுடா, நடிகை ஹேமமாலினி, பாரதீய ஜனதா மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர், நடிகர் வினோத் கன்னா உள்ளிட்டவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

நடவடிக்கை பாயும்:

நடவடிக்கை பாயும்:

சொத்து கணக்கு தெரிவிக்காதவர்கள் மீது சொத்துக்கள், கடன்கள் அறிவித்தல் விதிகள் 2004, பிரிவுகள் 5, 6, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 75(ஏ) ஆகியவற்றின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

English summary
401 MPs including Congress president Sonia Gandhi, senior BJP leader Advani have yet to declare their assets to the parliament secretariate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X