For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழிவின் விளிம்பில் தமிழகத்தின் கோட்டா, தோடா உட்பட 42 இந்திய மொழிகள்!

தமிழகத்தின் கோட்டா மற்றும் தோடா மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றனவாம்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தின் 2 வட்டார மொழிகள் உட்பட 42 இந்திய மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றனவாம்.

இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகள் மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன. இந்த மொழிகளை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பேசுகின்றனர்.

42 languages may be heading for extinction

இதில் 42 வட்டார மொழிகளை 10,000க்கும் குறைவானோர்தான் பேசுகின்றனர். இந்த மொழிகள்தான் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றனவாம்.

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 11 ஆதிகுடிகளின் மொழிகளும் மணிப்பூர் பழங்குடிகளின் 7 மொழிகளும் ஹிமாச்சலில் 4, ஒடிஷாவில் 3, கர்நாடகாவில் 2, தமிழகத்தில் 2 வட்டார மொழிகளும் அடங்கும்.

தமிழகத்தில் நீலகிரி மலையில் ஆதிகுடிகள் பேசும் கோட்டா, தோடா மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்த வட்டார மொழிகளுக்கு எழுத்து வடிவம் என்பது இல்லை. அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களிலும் ஆதிகுடிகளின் மொழிகள் அழியக் காத்திருக்கின்றனவாம்.

English summary
42 languages in India are considered to be endangered and is believed to be heading towards extinction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X