உலக சாதனைக்காக தயாராகும் 800 கிலோ கிச்சடி... தேசிய உணவாக அறிவிக்க திட்டம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று தொடங்கி வரும் 5ம் தேதி வரை 'உலக உணவு- இந்தியா 2017' என்ற கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது. மத்திய உணவுத் துறை அமைச்சகமும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்துகின்றது.

மிகவும் பெரிய அளவில் நடக்க இருக்கும் இந்த கருத்தரங்கில் பல நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன. இந்த நிலையில் அந்த கருத்தரங்கில் இன்று நடக்கும் நிகழ்வில் கிச்சடி இந்திய தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் கடைசியில் அப்படி வெளியான தகவல் பொய் என மறுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று டெல்லியில் நடக்கும் 'உலக உணவு- இந்தியா 2017' என்ற கருத்தரங்கில் உலக சாதனைக்காக 800 கிலோ கிச்சடி செய்யப்பட இருக்கிறது. மேலும் கிச்சடி தேசிய உணவாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.

 டெல்லியில் நடக்கும்

டெல்லியில் நடக்கும்

டெல்லியில் நாளை தொடங்கி வரும் 5ம் தேதி வரை 'உலக உணவு- இந்தியா 2017' என்ற கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது. மிகவும் பெரிய அளவில் நடக்க இருக்கும் இந்த கருத்தரங்கில் பல நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன. இந்த உணவு திருவிழாவில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் பிரதிநிதியாக ஒரு உணவுப் பொருள் சமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான உணவுகள் அந்த நாட்டின் தேசிய உணவு ஆகும்.

 இன்று கிச்சடிக்கான நாள்

இன்று கிச்சடிக்கான நாள்

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து இந்த நிகழ்வில் கிச்சடி சமைக்கப்பட இருக்கிறது. கிச்சடி இந்திய உணவுகளின் பிரதிநிதியாக அங்கு சமைக்கப்பட இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அந்த கருத்தரங்கில் இன்று நடக்கும் நிகழ்வில் கிச்சடி இந்திய தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதன்காரணமாக ஒரே நாளில் கிச்சடி வைரல் ஆனது.

 தவறான தகவல்

தவறான தகவல்

இதையடுத்து இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆனது. அதன்படி எல்லா நாடுகளும் அவர்கள் தேசிய உணவை சமைக்க இருக்கிறார்கள் இந்தியாவில் இருந்து கிச்சடி சமைக்கப்பட்ட இருக்கிறது. எனவே கிச்சடிதான் நமது தேசிய உணவு என்று கூறப்பட்டது. இந்த தகவலுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் ''கிச்சடி குறித்த பொய்யான தகவல்களை பரப்பியது போதும். கிச்சடி இந்திய உணவுகளின் பிரதிநிதியாக மட்டுமே சமைக்கப்படுகிறது'' என்று கூறினார்.

 இன்று உலக சாதனை

இன்று உலக சாதனை

இந்த நிலையில் கிச்சடியை வைத்து இன்று உலக சாதனை செய்யப்பட இருக்கிறது. அதன்படி அங்கு 800 கிலோ கிச்சடி சமைக்கப்பட இருக்கிறது. சஞ்சீவ் கப்பூர் என்ற பிரபல சமையல் நிபுணர் இந்த சாதனையை செய்ய இருக்கிறார். மத்திய அமைச்சர் மறுப்பு தெரிவித்து இருந்தாலும் இன்னும் சிலர் கிச்சடி தேசிய உணவாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறிவருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
News spreads like fire says that Kichchadi is our national food. The Union Minister of Food Processing Harsimrat Kaur Badal clarified khichdi was only selected for the World Food India event in a bid to popularise it and it is not a national food. 800 kg kichchadi will be prepared by celebrity chef Sanjeev Kapoor today in Delhi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற