For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ் கட்சியை சேராத 8வது பிரதமர் நரேந்திர மோடி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியைச் சேராத 8வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார்.

நமது நாடு இதுவரை 13 பிரதமர்களை சந்தித்துள்ளது. இதில் 16 ஆண்டுகாலம் நாட்டின் பிரதமராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார்.

அவருக்குப் பின்னர் குல்சாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி பதவி வகித்தனர். இவர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே. 1966ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை 11 ஆண்டு காலம் பதவி வகித்த இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரே.

மொரார்ஜி தேசாய்

மொரார்ஜி தேசாய்

காங்கிரஸ் பாரம்பரியத்தை உடைத்து ஜனதா பாரம்பரியத்தின் முதலாவது பிரதமராக 1977ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் மொரார்ஜி தேசாய். அவர் குஜராத்தின் சூரத் லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்தார்.

சரண்சிங்

சரண்சிங்

அவரது அமைச்சரவை கவிழ்ந்த போது அதே ஜனதா கட்சியைச் சேர்ந்த சரண்சிங் பிரதமரானார். அவரது அமைச்சரவையும் நீண்டகாலம் நீடிக்காமல் போனது. நாட்டின் பிரதமர் பதவி மீண்டும் காங்கிரஸ் வசமானது. இந்திரா, ராஜிவ் அடுத்தடுத்து பொறுப்பு வகித்தனர். அதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு மீண்டும் ஜனதா பாரம்பரியம் தலையெடுத்தது.

வி.பி.சிங்

வி.பி.சிங்

மொரார்ஜி, சரண்சிங்கைத் தொடர்ந்து காங்கிரஸ் அல்லாத 3வது பிரதமராக 1989-ல் ஜனதா தளத்தைச் சேர்ந்த வி.பி.சிங் 343 நாட்கள் நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.

சந்திரசேகர்

சந்திரசேகர்

அவரது ஆட்சி கவிழ்ந்த போது ஜனதா தளத்தை உடைத்துக் கொண்டு வெளியேறிய சந்திரசேகர் 1991-ல் அடுத்த பிரதமரானார். 1991-ல் நாட்டின் பிரதமர் மீண்டும் காங்கிரஸ் வசமானது. அப்போது நரசிம்மராவ் பிரதமரானார்.

வாஜ்பாய்

வாஜ்பாய்

பின்னர் 1996ல் மீண்டும் ஜனதா வசமானது பிரதமர் பதவி. ஆனால் பழைய ஜனதாவாக இல்லாமல் பாரதிய ஜனதாவாக உருமாற்றிய வாஜ்பாய் பிரதமரானார்.

தேவகவுடா

தேவகவுடா

அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு அடுத்த பிரதமராக ஜனதா தளத்தைச் சேர்ந்த தேவ கவுடா 1996-ல் பிரதமரானார். அவரது அரசும் 324 நாட்கள் தாக்குப் பிடித்தது.

குஜ்ரால்

குஜ்ரால்

அதைத் தொடர்ந்து ஜனதா தளத்தைச் சேர்ந்த ஐ.கே. குஜ்ரால் 1997ல் பிரதமரானார். அவரது அரசும் கூட 332 நாட்களே நீடித்தது.

மீண்டும் வாஜ்பாய்

மீண்டும் வாஜ்பாய்

பின்னர் 1998 தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதாவின் வாஜ்பாய் பிரதமரானார். 2004ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியில் நீடித்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் வசமே மீண்டும் பிரதமர் பதவி போனது. 2004 முதல் 10 ஆண்டுகாலம் வரை காங்கிரஸ் கட்சியின் மன்மோகன்சிங் பிரதமரானார்.

மோடி

மோடி

தற்போது தேர்தலில் வென்று பாரதிய ஜனதா வசம் பிரதமர் பதவி போயுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேராத 8வது பிரதமராக திகழ்கிறார் நரேந்திர மோடி.

English summary
Narendra Modi, Bharatiya Janata Party's prime ministerial candidate is all set to take the position. Here is an analysis of non congress prime ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X