என் சாவுக்கு பிரதமர் மோடிதான் காரணம்.. விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தன் சாவுக்கு மோடிதான் கரணம் என எழுதி வைத்து தற்கொலை செய்த விவசாயி

  மும்பை: மகாராஷ்டிராவில் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி தனது சாவுக்கு பிரதமர் மோடிதான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலத்தின் பல மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மோசமான வறட்சியை சந்தித்திருக்கும் மாவட்டங்களில் யவத்மால் மாவட்டம் முக்கியமானது.

  யவத்மால் மாவட்டத்தில் உள்ள ராஜூர்வாடி கிராமத்தைச் சேர்ந்த ஷங்கர் பாவ்ராவ் சாயிரே. 50 வயது விவசாயியான இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

  தூக்கு போட முயற்சி

  தூக்கு போட முயற்சி

  வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போனதால் கடும் கடன் நெருக்கடிக்கு ஆளான் ஷங்கர் பாவ்ராவ் சாயிரே நேற்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அங்குள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.

  விஷம் அருந்திய விவசாயி

  விஷம் அருந்திய விவசாயி

  ஆனால், தூக்குக்கயிறு அறுந்துபோனது. இதனால் வீட்டிற்கு வந்த அவர் விஷமருந்தினார். சுயநினைவின்றி கிடந்த ஷங்கரை, அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  உயிரிழந்த விவசாயி

  உயிரிழந்த விவசாயி

  அங்கு அவரை பரிசோதித்த மருந்துவர்கள் ஷங்கர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த விவசாயி ஷங்கர், பருத்தி விளைச்சலுக்காக 3 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

  வருமானமின்றி அவதி

  வருமானமின்றி அவதி

  விளைச்சலுக்கு முன்பாக பிங்க் புழுக்களால் பருத்தி விற்பனை வீழ்ச்சியடைந்த நிலையில், போதிய வருமானமின்மையால் அவர் அவதிப்பட்டுள்ளார். தனது கடன்பிரச்சனையில் இருந்து மீட்க பல்வேறு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளைச் சந்தித்தாகவும் தெரிகிறது.

  மோடிதான் காரணம்

  மோடிதான் காரணம்

  ஆனால் எந்த பலனும் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ஷங்கர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக தனது சாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

  கடிதத்தால் பரபரப்பு

  கடிதத்தால் பரபரப்பு

  விவசாயி ஒருவர் தனது சாவுக்கு பிரதமர் மோடிதான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராஷ்டிர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A 50-year-old farmer in Maharashtra's Yavatmal district committed suicide by drinking poison. Due to debt issues he committed suicide and blaming Prime Minister Narendra Modi is the reason for his death.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற