For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் டென்ஷனான மம்தா.. மேடையேற மறுத்ததால் பரபரப்பு.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா - நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி விழா மேடையில் ஏறாமல் ஆடியன்ஸ்கள் இருக்கும் பகுதியிலே இருந்து கொண்டது விழா நடக்கும் போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய ரயில்வேயை நவீனமயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் படிபடியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா-நியூஜல்பை குரி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

உடலில் 50 இடங்களில் துளை.. 5 வயதில் புக் ரிலீஸ்.. 2022ன் டாப் 5 கின்னஸ் சாதனைகள் என்னென்ன தெரியுமா? உடலில் 50 இடங்களில் துளை.. 5 வயதில் புக் ரிலீஸ்.. 2022ன் டாப் 5 கின்னஸ் சாதனைகள் என்னென்ன தெரியுமா?

குஜராத் சென்றார் மோடி

குஜராத் சென்றார் மோடி

பிரதமர் மோடி நேரில் சென்று துவங்கி வைப்பதாக முதலில் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால், தாயார் ஹீராபென் மோடியின் திடீர் மறைவால் தனது மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி குஜராத் மாநிலம் சென்றார். குஜராத்தின் காந்தி நகரில் தனது தாயர் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்த பிறகு சிதைக்கு தீ மூட்டினார். தயார் உடலை தகனம் செய்த சிலமணி நேரங்களில் தனது வழக்கமான பணிகளை பிரதமர் மோடி தொடங்கினார்.

காணொலி வாயிலாகவே தொடங்கி வைத்தார்

காணொலி வாயிலாகவே தொடங்கி வைத்தார்

மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்தாலும் திட்டமிட்டபடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியில் கணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். ஹவுரா - நியூஜல்பை குரி வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாகவே தொடங்கிவைத்தார். நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த் போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேடையில் ஏற மறுத்த மம்தா பானர்ஜி

மேடையில் ஏற மறுத்த மம்தா பானர்ஜி

இந்த விழா நடைபெற்று கொண்டிருந்த போது விழாவில் பங்கேற்று இருந்த ஒரு தரப்பினர் ஜெய் ஸ்ரீ ராம் என எழுப்பிய கோஷத்தால் மம்தா பனர்ஜி கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் கோபத்துடன் காணப்பட்ட மம்தா பானர்ஜி விழா மேடையில் ஏற மறுத்துவிட்டார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மாநில ஆளுநர் சிவி ஆனந்த் போஸ் ஆகியோர் மம்தா பானர்ஜியை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும் இதை ஏற்க மறுத்த மம்தா பானர்ஜி விழா மேடையில் ஏறாமல் பார்வையாளர்களுக்கான இருக்கையில் இருந்தபடியே நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, மோடியின் தாயார் மறைவைக் குறிப்பிட்டு ஆறுதல் தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி உள்ளம் உடைந்து துயரம் தோய்ந்த முகத்துடன் சோகமாக மேடையில் அமர்ந்திருந்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கு வங்க மாநிலத்திற்கு நேரில் வர முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று உருக்கமாக பேசினார்.

English summary
Prime Minister Modi today inaugurated the Vande Bharat train service between Howrah - New Jalpai Guri in West Bengal through a video presentation. Mamata Banerjee, who was displeased during the event, did not go on the stage and stayed in the audience area, causing a stir during the event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X