நடிகை மைத்ரியா எனது மனைவி.. இயக்குநர் புதிய புகார்: கார்த்திக் கவுடா வழக்கில் திடீர் திருப்பம்
பெங்களூர்: நடிகை மைத்ரியா எனது மனைவி. அவர் என்னை ஏமாற்றிவிட்டார். என்று சினிமா இயக்குனர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதன்மூலம் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா வழக்கில் புதிய சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா. இவருக்கும், குடகு மாவட்டம் சோமவார் பேட்டையை சேர்ந்த நானய்யா என்பவரின் மகள் சுவாதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அது நடந்து முடிந்த சில மணிநேரத்தில் கார்த்திக் கவுடா தன்னை காதலித்து, ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து இருப்பதாக கன்னட நடிகை மைத்ரியா, பரபரப்பு குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக கார்த்திக் கவுடா மீது ஆர்.டி.நகர் போலீசில் மைத்ரியா புகாரும் செய்தார். அதன்பேரில், கார்த்திக் கவுடாவுக்கு எதிராக பலாத்காரம், மோசடி உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கன்னட இயக்குநர் புகார்
இந்த நிலையில், கன்னட திரைப்பட இயக்குனர் ரிஷி என்பவர் பெங்களூர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் மூலமாக ஒரு புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

இயக்குநரின் மனைவியா?
அதில் "நடிகை மைத்ரியா என் மனைவி. எனக்கும் நடிகை மைத்ரியாவிற்கும் கடந்த 2004-ல் திருமணம் நடந்தது. நடிகை மைத்ரியா என்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றி விட்டார். இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக நாடகமாடுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய சர்ச்சை
இது தொடர்பாக இயக்குனர் ரிஷியின் பேட்டியும், அவர் அளித்த ஆதாரமும் நேற்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இது கர்நாடகாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு சர்ச்சையையும் கிளப்பியது.

நான் அப்போ மைனர்
இந்த புகார் தொடர்பாக நடிகை மைத்ரியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "இயக்குனர் ரிஷி என்னை திருமணம் செய்து கொண்டதாக கூறிய 2004-ம் வருடம் எனக்கு 16 வயது என்றார்.

மானநஷ்ட வழக்கு
கார்த்திக் கவுடா எனக்கு பணம் கொடுத்து சரிகட்ட நினைத்தார். ஆனால் என் முடிவில் நான் உறுதியாக இருந்ததால் வேறு வகையில் என்னை மிரட்ட நினைக்கிறார். மேலும் ரிஷி என்பவர் மூலம் என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார். இதுகுறித்து இயக்குனர் ரிஷி மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன்'' என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications