ஐஐடி மாணவர் சேர்க்கை, கலந்தாய்வுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை ஐஐடி உள்பட நாடு முழுவதும் உள்ள ஐஐடியில் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு விதித்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் விலக்கிக்கொண்டது.

ஜெஇஇ தேர்வின்போது, ஹிந்தி மொழி, கேள்வித்தாளில் பிழை இருந்தபோதிலும், ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், 'கிரேஸ் மார்க்' வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த பல்ராம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்கு மொத்தமாக இடைக்கால தடை விதிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Admissions to IIT can go on as SC vacates stay

இதையடுத்து இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஐஐடி மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சலிங்கிற்கு விதித்த இடைக்கால தடையைய விலக்கிக் கொண்டுள்ளது. ஏற்கனவே 33000 மாணவர்கள் பல்வேறு ஐஐடிகளில் சேர்ந்துவிட்டதால், தடை விதிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று, முன்னதாக, மத்திய அரசு தனது வாதத்தில் தெரிவித்திருந்தது.

எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாண்டு கேள்வித்தாளை தயாரித்தது சென்னை ஐஐடி என்பதால், இதுகுறித்து விளக்கம் அளிக்க சென்னை ஐஐடிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Admissions to the IITs can go on with the Supreme Court vacating the stay imposed on the ongoing counselling and admission. As a result of the stay being vacated the admission and counselling process can go on. 33,000 candidates have already taken admissions in various IITs across the country.
Please Wait while comments are loading...