For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகை ஜெயபிரதாவுடன் அஜீத் சிங் கட்சியில் சேர்ந்த அமர் சிங்

By Siva
Google Oneindia Tamil News

Amar Singh, Jaya Prada join RLD
டெல்லி: சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அமர் சிங் மற்றும் நடிகை ஜெயபிரதா ஆகியோர் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியில் இன்று இணைந்தனர்.

கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அமர் சிங்கும், அவரது தீவிர ஆதரவாளரான நடிகை ஜெயபிரதாவும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அமர் சிங் லோக் மஞ்ச் கட்சியை துவங்கினார். அவரது கட்சி கடந்த 2012ம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் 360 தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.

இந்நிலையில் அவரும், ஜெயபிரதாவும் காங்கிரஸ் கட்சியில் சேர்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியில் இன்று சேர்ந்தனர். அமர் சிங் பதேஹ்பூர் சிக்ரி தொகுதியிலும், ஜெயபிரதா பிஜ்னோர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலுக்காக தாங்கள் அஜீத் சிங் கட்சியில் சேரவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் மகன் தான் அஜீத் சிங். அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி உத்தர பிரதேச மாநிலம் மதுரா தொகுதி எம்.பி. ஆவார்.

English summary
Former SP leader Amar Singh and his supporter actress turned politician Jaya Prada have joined Ajit Singh's Rashtriya Lok Dal on monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X