ராகுல் காந்தி தொகுதி அமேதியில், அமித்ஷா.. பரபரப்பில் உ.பி அரசியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமேதி: பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் லோக்சபா தொகுதியான அமேதியில் இன்று பயணம் மேற்கொள்ள உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் ராகுல் காந்தி நடுவே அரசியல் ரீதியாக மோதல்கள் தொடரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதிக்கு, இன்று அமித்ஷா செல்கிறார்.

Amit Shah in Congress chief Sonia Gandhi's Amethi

அமேதி செல்லும் அமித்ஷா அங்கு பல நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அப்போது உடனிருப்பார்கள்.

அமேதி தொகுதியில், கடந்த லோக்சபா தேர்தலில், ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர் ஸ்மிருதி இரானி. இதில் இரானி தோற்றாலும், 2009 லோக்சபா தேர்தலில் 3.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தியால் 2014ல் 1.07 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில், அமேதிக்கு அமித்ஷா செல்வது உ.பி. அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The BJP chief is visiting Congress' bastion today. Shah and Union minister Smriti Irani will unveil a slew of projects in the area.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற