For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனித உரிமைகள் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?: பிரதமர் வேட்பாளர்களுக்கு அம்னஸ்டி கடிதம்

Google Oneindia Tamil News

Amnesty asks India’s PM candidates to reveal stand on HR issues
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவே மனித உரிமைப் பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் வேட்பாளர்கள் தங்கள் நிலைபாட்டை அறிவிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபையின் (அம்னஸ்டி இண்டர்நேஷனல்) இந்தியக் கிளை கடிதம் எழுதியுள்ளது.

அதன்படி, அம்னஸ்டி அணுகியுள்ள தலைவர்களில் ராகுல், மோடி, ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ், நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், அரவிந்த் கேஜ்ரிவால், மாயாவதி ஆகியோர் உள்ளனர்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் திட்ட இயக்குநர் சசிகுமார் வெலாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

2014க்கு 2014...

எங்கள் அமைப்பு ‘2014-க்கு 2014' என்ற இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறது. அதில் வேட்பாளர்கள் காவல் துறை சீர்திருத்தங்கள், விசாரணைக் கைதிகள், ராணுவப் படையினருக்கு விதிவிலக்கு, நிலம் கையகப்படுத்துதல், பேச்சுரிமை போன்ற பிரச்சினைகளில் தங்களது நிலையை தெரிவிக்க வேண்டும் என்று மக்களவை தேர்தலின் பிரதமர் வேட்பாளர்களிடம் கேட்டிருக்கிறோம்.

பிரதமர் வேட்பாளர்கள்...

நாங்கள் அணுகியுள்ள தலைவர்களில் ராகுல்காந்தி, நரேந்திர மோடி, ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ், நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், அரவிந்த் கேஜ்ரிவால், மாயாவதி ஆகியோரும் அடங்குவர்.

தேர்தல் அறிக்கையில் மனித உரிமைகள்....

தேர்தலின்போது பல நேரங்களில் மனித உரிமைகள் ஏதோ சாதாரணப் பிரச்சினையாக கருதப்படுவதால் தாங்கள் அதை முன்னிறுத்துவதாகவும், 2014-க்கு 2014 மனித உரிமைகள் பிரகடனத்தை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம்.

முக்கியப் பிரச்சினைகள்...

அதில் வணிகம் மற்றும் மனித உரிமைகள், குற்றவியல் நீதிமுறையில் சீர்திருத்தங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை, மரண தண்டனை, இடம்பெயரும் தொழிலாளர்களின் உரிமைகள் போன்ற பிரச்சனைகளும் இடம் பெற்றுள்ளன என்று அவர் கூறினார்.

பதில் இல்லை...

இந்தக் கடிதம் கடந்த புதன்கிழமை அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தலைவர்களிடமிருந்து இதுவரையும் எந்த பதிலும் வரவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The Amnesty International India has asked the probable prime ministerial candidates for 2014 to reveal their stand on crucial human rights issues facing the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X