For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே- 370வது பிரிவு நீக்கம் அவசியம்: ஒமருக்கு ஆர்.எஸ்.எஸ். பதில்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதியே.. அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பதிலளித்துள்ளது.

நரேந்திர மோடி அமைச்சரவை நேற்று முன் தினம் பதவியேற்றது. இதைத் தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். மோடி அரசின் முதல் சர்ச்சையாக, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்குவதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவோம் என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறினார்.

இதற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 370வது பிரிவு நீக்கம்தான் அவசியமா? அல்லது ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பது அவசியமா? என்றும் ஒமர் அப்துல்லா ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ். பதிலடி

இதற்கு பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ்- ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார்.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>J&K won't b part of India? Is Omar thinking its his parental estate? 370 or no 370 J&K has been n will always b an integral part of India.</p>— Ram Madhav (@rammadhavrss) <a href="https://twitter.com/rammadhavrss/statuses/471448366954463232">May 28, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

"ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லையா? அதென்ன ஒமர் அப்துல்லாவின் சொந்த எஸ்டேட்டா? 370வது பிரிவு இருப்பது அல்லது இல்லாமல் செய்வது ஒருபக்கம்.. ஜம்மு காஷ்மீர் என்பது எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என்று பதிலடி கொடுத்துள்ளார்.

English summary
Amidst the raging debate over Article 370, Rashtriya Swayamsevak Sangh (RSS) spokesperson Ram Madhav has lashed out at Jammu and Kashmir Chief Minister Omar Abdullah tweeting that the state "has been and will always be a part of India."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X