For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களின் சில்லறை தட்டுப்பாட்டை போக்க ஏடிஎம்களில் 50 ரூபாய் நோட்டுக்கள் - ஆர்பிஐ அறிவிப்பு

மக்களின் சில்லரை தட்டுப்பாடு போக்கும் வகையில் நாளை முதல் அனைத்து ஏ.டி.எம்., களில் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக இன்று முதல் நாடுமுழுவதும் உள்ள வங்கிகளில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும், நாளை முதல் அனைத்து ஏடிஎம்களிலும் 500, 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏடிஎம் மிசின்களில் 500 ரூபாய் 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே கிடைக்கும். இனி 50 ரூபாய் நோட்டுக்கள் அவ்வளவாக கிடைக்காது. ஆனால் நாளை முதல் சில்லரை தட்டுப்பாடு தடுக்கும் பொருட்டு 50 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் தாராளமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ATMs to dispense Rs 50 notes from Nov 11 - RBI

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கக் கூட போதுமான 100,50 ரூபாய்கள் இல்லாமல் அல்லல்படுகின்றனர். 500, 1000 ரூபாய் வாங்குவதோ, கொடுப்பதோ பிரச்னை இல்லை. சில்லறை கொடுக்க 100 ரூபாய் நோட்டுகள் இல்லை என்பதே மக்களின் வாழ்க்கையை முடக்கிவிட்டது.

இன்றைக்கு சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருமே 500 ரூபாய் நோட்டுக்களை உபயோகிக்கின்றனர். அவர்களிடமும் 50, 100 ரூபாய் நோட்டுக்களை காண்பது அரிதாவே உள்ளது, எனவே மக்களின் சில்லறை தேவையை கருத்தில் கொண்டு, நாளை முதல் சில்லரை தட்டுப்பாடு தடுக்கும் பொருட்டு 50 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம்.,களில் தாராளமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே சற்றே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது

English summary
The Reserve Bank of India said all ATMs and cash dispensing machines will have to be re-configured to disburse bank notes of Rs 100 and Rs 50 denominations prior to reactivation of the machines on 11th November, 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X