28 வங்கிகளில் ரூ22,842 கோடி வங்கி கடன் மோசடி: குஜராத் நிறுவனம் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு!
அகமதாபாத்: 28 வங்கிகளில் ரூ22,842 கோடி கடன் பெற்று மோசடி செய்த குஜராத்தின் ABG ஷிப்யார்ட் நிறுவனம் மீது அன்னிய செலாவனி மோசடி வழக்கு பாய்ந்துள்ளது.
நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று வெளிநாட்டுக்கு தொழிலதிபர்கள் தப்பி ஓடுவது தொடர் கதையாகி வருகிறது. அப்படி தப்பி ஓடிய தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் சுதந்திரமாக உலவுகின்றனர். இவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் பலன் தரவும் இல்லை.
இதன் உச்சமாக இப்போது ரூ22,842 கோடி வங்கி கடன் மோசடி பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

ஏபிஜி ஷிப்யார்டு
குஜராத்தின் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி, அஸ்வினி குமார் ஆகியோர் மீது வங்கி கடன் மோசடி தொடர்பாக சிபிஐ ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது அன்னிய செலாவணி மோசடி தொடர்பாகவும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

98 நிறுவனங்களுக்கு மடைமாற்றம்
ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனமானது மொத்தம் 98 நிறுவனங்களுக்கு வங்கி கடன்களை மடைமாற்றி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல்கள் பழுது பார்க்கும் பணிகளை செய்து வருகிறது. இந்த மோசடிகள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக விரைவில் நோட்டீஸ் அனுப்பவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வங்கி கடன் மோசடி விவரம்
இந்தியாவில் இதுவரையிலான வங்கி கடன் மோசடிகளில் மிக பெரிய அளவிலானது இது. கடந்த வாரம் சிபிஐ வழக்குப் பதிவு செய்ததுடன் ஏபிஜி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் நாட்டைவிட்டு தப்பி ஓடாமல் இருக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏபிஜி நிறுவனம், எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ2,925 கோடி, ஐசிஐசிஐயில் ரூ7,089 கோடி, இடிபிஐ வங்கியில் ரூ3,634 கோடி, பாங்க் ஆப் பரோடாவில் ரூ1,614 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 1,244, ஐஓபியில் ரூ1,228 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்
கடந்த 2019-ம் ஆண்டே ஏபிஜி நிறுவனம் மோசடி நிறுவனம் என வங்கிகள் பட்டியலிட்டிருக்கின்றன. ஆனாலும் தற்போதுதான் இந்த மெகா வங்கி கடன் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications