பாஜகவும் களம் இறங்கியது.. தேவகவுடாவுடன் முன்னாள் அமைச்சர் அசோக் பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடக சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பம்- வீடியோ

  பெங்களூர்: மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடாவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்திதை அடுத்து தற்போது பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளது.

  கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

  BJP Ex Minister Ashok meets Deva Gowda to get support to form the government

  தற்போது கர்நாடக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இவ்வளவு நேரம் முன்னிலை வகித்து வந்த பாஜக கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மையை இழந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 104 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 76 ; ஜேடிஎஸ் 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் யாருடைய ஆட்சி அமையும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது.

  இந்த இக்கட்டான சூழ்நிலை உருவானவுடன், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர், தேவ கவுடாவுடன் ஆலோசனை நடத்தினர். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் இதுகுறித்து பேசினார். கடைசியில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள தயார், என்று கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது காங்கிரஸ்.

  இன்று மாலை ஐந்து மணிக்கு இரண்டு கட்சி எம்எல்ஏக்களும் சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர். இந்த நிலையில் தற்போது பாஜகவும் பேச்சுவார்த்தையில் களமிறங்கி உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடாவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

  தேவகவுடாவுடன் முன்னாள் பாஜக அமைச்சர் அசோக் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளார். இதில் குமாரசாமிக்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சரவையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு முக்கிய அமைச்சர் பதவியும் கொடுப்பது குறித்து பேச வாய்ப்புள்ளது. இதனால் கர்நாடகாவில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP Ex Minister Ashok meets Deva Gowda to get support to form the government in Karnataka.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற