For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மஜத எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.100 கோடி.. அமைச்சர் பதவி.. பாஜக மீது குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏக்களை வளைக்க தலைக்கு 100 கோடி ரூபாய் பாஜக பேரம் பேசுவதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.100 கோடி.. பாஜக மீது குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு.

    பெங்களூரு: மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏக்களை வளைக்க தலைக்கு 100 கோடி ரூபாய் பாஜக பேரம் பேசுவதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி தனிபெரும் கட்சியாக உள்ளது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

    மதசார்பற்ற ஜனதாதளம் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    குமாரசாமி தேர்வு

    குமாரசாமி தேர்வு

    இதில் கர்நாடக மஜத எம்எல்ஏக்கள் குழு தலைவராக எச்.டி.குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒருமனதாக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டதாக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    நம்பிக்கையை நான் பெறவில்லை

    நம்பிக்கையை நான் பெறவில்லை

    இதைத்தொடர்ந்து குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியானது இல்லை. கர்நாடக மக்கள் நம்பிக்கையை நான் பெறவில்லையோ என நினைக்கிறேன்.

    தப்பான எண்ணம் வரும்

    தப்பான எண்ணம் வரும்

    தொங்கு சட்டசபை அமையும் அளவுக்கான வாக்குகள் வந்துள்ளன. மஜத மீது மக்களுக்கு தப்பான எண்ணம் வரும் அளவுக்கு பிரச்சாரம் நடந்தது.

    பாஜக வெற்றிக்கு காரணம்

    பாஜக வெற்றிக்கு காரணம்

    பாஜகவை ஆட்சிக்கு வர வைக்க 104 தொகுதிகளை மக்கள் கொடுக்கவில்லை. மதசார்பற்ற கட்சிகளின் பிரிவினைதான் பாஜக வெற்றி பெற காரணம்.

    தலைக்கு தலா ரூ.100 கோடி

    தலைக்கு தலா ரூ.100 கோடி

    மஜத எம்எல்ஏக்களை வளைக்க தலைக்கு தலா 100 கோடி பேரம் பேசப்படுகிறது. அமைச்சர் பதவி தருவதாக பாஜக அழைப்பு விடுக்கிறது.

    இந்த பணம் எங்கே உள்ளது?

    இந்த பணம் எங்கே உள்ளது?

    ஊழலை ஒழிப்பதாக கூறிய கட்சியிடம் இந்த பணம் எங்கே உள்ளது? என செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார் குமாரசாமி.

    2 பேரை தூக்குவோம்

    2 பேரை தூக்குவோம்

    மஜதவில் இருந்த ஒரு எம்எல்ஏவை இழுத்தால் பாஜகவில் இருந்து 2 பேரை தூக்குவோம். மேலும் மஜதவை காலி செய்ய நினைத்து பாஜகவை வளர்த்துவிட்டுள்ளனர்." என்றும் காங்கிரஸ் கட்சியையும் குமாரசாமி மறைமுகமாக தாக்கினார்.

    English summary
    Kumarasami says BJP trying to pull JDS MLAs. BJP offers Rs 100 crore and minister post for JDS MLAS he said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X