குடியரசுத்தலைவர் தேர்தல்: ஆதரவு கோரி சோனியாவுடன் பாஜக குழு சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தியை சந்தித்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைத்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் முன் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக மாநிலக் கட்சிகள் ஒப்புகொண்டுள்ளன.

BJP senior leaders holding meeting with Sonia gandhi at Delhi

இதே போன்று பாஜகவிற்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பெரும்பான்மை பலம் இருக்கிறது. எனினும் குடியரசுத் தலைவர் தேர்தலில் கடுமையான போட்டி இருப்பதால் அதனை தவிர்க்கும் பொருட்டு அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்தி அவரை வெற்றி பெறச் செய்யலாம் என்று பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சியினரை சமாதானப்படுத்தும் மரபு வழி நிகழ்வாக இந்த சந்திப்பு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. வெங்கையா நாயுடு மாநிலக் கட்சிகளுடன் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்.

இதே போன்று தேசிய தலைவர்களுடனான சந்திப்பை ராஜ்நாத்சிங்கும் நடத்தி வருகின்றனர். எனவே இந்த இரண்டு தலைவர்களும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து அவர்களின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் அரை மணி நேரமாக நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் தேர்தலை அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. பொதுவேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் எதிர்காலத்தில் இரண்டு கட்சிகளுக்கும் இதனால் பயன் இருக்கும் என்று பாஜக தலைவர்கள் இந்த சந்திப்பின் போது சோனியாகாந்தியிடம் எடுத்துச் சொன்னதாக தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union Ministers Rajnath Singh and Venkaiah Naidu have reached Congress president Sonia Gandhi's house to discuss the candidate to be elected as the next President of India.
Please Wait while comments are loading...