For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிருக்கு பயந்து ஓடிய போலீஸ்.. கற்கள்,கட்டையால் காக்கிகளை தாக்கிய காவிகள்! கொல்கத்தாவில் பாஜக கலவரம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை பாஜகவினர் கற்கள், கட்டைகளால் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாககூட மேற்கு வங்க மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனைகளை நடத்துவதாக திரிணாமூல் கட்சி குற்றம்சாட்டி வருகிறது

தேசியக் கொடியை வாங்க மறுத்த ஜெய் ஷா.. எழுந்த விமர்சனங்கள்! தேசியக் கொடியை வாங்க மறுத்த ஜெய் ஷா.. எழுந்த விமர்சனங்கள்!

 மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சி கூட்டணியை கட்டமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் மேற்கு வங்க அரசின் ஊழலை கண்டித்து தலைமைச் செயலகம் நோக்கி நேற்று பாஜக பேரணி செல்வதாக அறிவித்தது.

படையெடுத்த பாஜகவினர்

படையெடுத்த பாஜகவினர்

இதனை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜகவினர் தலைநகர் கொல்கத்தாவுக்கு வருகை தந்தனர். தெற்கு வங்கம், வடக்கு வங்கம் பகுதிகளில் இருந்து தொண்டர்களை அழைத்து வர 3 ரயில்களை வாடகைக்கு எடுத்தது பாரதிய ஜனதா கட்சி. இது அல்லாமல் ஏராளமான பேருந்துகளில் இருந்தும் பாஜக தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர்.

கலவரமும் கைதும்

கலவரமும் கைதும்

பாஜகவினரின் பேரணி காரணமாக தலைநகர் கொல்கத்தாவில் போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து ஹவுரா பாலத்தில் பாஜக தொண்டர்களை போலீசார் கைது செய்தார்கள். சந்திரகாச்சி பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி கைது செய்யப்பட்டார். மேலும் பல பாஜக மூத்த தலைவர்கள் கைதானதால் தொண்டர்கள் கொதிப்படைந்தனர்.

போலீசார் மீது தாக்குதல்

போலீசார் மீது தாக்குதல்

காவல்துறையை கண்டித்து பாஜகவினர் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடபடத் தொடங்கியதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் முயன்றபோது அவர்கள் மீது பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். கொல்கத்தால் போலீசார் ஒருவரை கட்டை மற்றும் கற்களை கொண்டு பாஜகவினர் கொடூரமாக ஓட ஓட விரட்டிப் பிடித்து தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Following the outbreak of violence in a rally held by the BJP against the West Bengal state government, a video of the BJP workers chasing away the policeman with stones and sticks has created a stir on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X