For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் சுரங்கப் பாதை.. ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டியது கண்டுபிடிப்பு!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்குக் கீழே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது 1885ம் ஆண்டு கட்டப்பட்டு இவ்வளவு நாள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த சுரங்கப்பாதை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையின் கீழே உள்ள இந்தச் சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலில் 20 அடி உயர இரும்புக் கதவு உள்ளது. அதனைத் திறந்து கொண்டு உள்ளே சென்றால் 13 அறைகளும், ஆயுதங்கள் சேமிக்கும் கிடங்கும் உள்ளன.

இந்தச் சுரங்கப் பாதையை மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழு, நேற்று பார்வையிட்டனர். வரலாற்றுச் சின்னமான இந்தச் சுரங்கப் பாதையை, அதன் பாரம்பரியம் பாராமல் பாதுகாக்குமாறு, பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

சுரங்கப் பாதையில் காற்று வசதி, வெளிச்சத்திற்கான வசதி, கழிவு நீர் செல்லும் பாதை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருப்பதைக் பார்வையிட்ட ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த சுரங்கப் பாதை மூடப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
A 150 metre British-era Bunker has been discovered inside Raj Bhavan in Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X