For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புர்கா அணிந்து சிஆர்பிஎப் முகாம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! பெண் கைது

Google Oneindia Tamil News

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களின் முகாம் மீது புர்கா அணிந்து பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்காக சிஆர்பிஎப் வீரர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.

ஆண் குழந்தை ரூ.10 லட்சம், பெண் குழந்தை ரூ.5 லட்சம் - பரபரக்க வைக்கும் ராணிப்பேட்டை குழந்தை விற்பனை ஆண் குழந்தை ரூ.10 லட்சம், பெண் குழந்தை ரூ.5 லட்சம் - பரபரக்க வைக்கும் ராணிப்பேட்டை குழந்தை விற்பனை

இதேபோல், ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் சேபூர் நகரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கான முகாம் உள்ளது. இங்கு ஏராளமான வீரர்கள் உள்ளனர்.

 பெட்ரோல் குண்டு வீச்சு

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்நிலையில் மார்ச் 29ம் தேதி முகாம் மீது திடீரென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சிஆர்பிஎப் தரப்பிலும், போலீசார் தரப்பிலும் விசாரணை துவங்கப்பட்டது. முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசியது யார் என தீவிர விசாரணை நடத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பெண் கைது

பெண் கைது

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி செல்வது கேமாக்களில் பதிவாகி இருந்தது. இந்த காட்சியை கொண்டு பெட்ரோல் குண்டு வீசிய பெண்ணை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண் குறித்து காஷ்மீர் ஐஜி விஜயகுமார் கூறியதாவது:

யார் இவர்

யார் இவர்

கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஹசீனா அக்தர். இவரது வயது 28. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது கணவர் பெயர் முகமது யூசுப் பட். இவர் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியை சேர்ந்தவர். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி சேகரித்தது தொடர்பாக 2008ல் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பதிவு செய்த வழக்கில் சிறையில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியான ஆசியா அன்ட்ராபியுடன் இவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பயங்கராவாதத்துக்கு போஸ்டர்

பயங்கராவாதத்துக்கு போஸ்டர்

2019ல் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டிய வழக்கில் தொடர்பு கொண்டுள்ளார். இவர் 2021ல் ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Burqa wearing woman throws petrol bomb at CRPF camp at sopore in Jammu Kashmir and now arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X