• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ?

|

டெல்லி: ஆதார் எண்ணை வைத்திருந்தால்தான் கேஸ் சிலிண்டருக்கான மானியத் தொகையைப் பெற முடியும் என்பது வரை மட்டுமே மக்களுக்கு அதைப் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் ஆதார் எண்ணை வைத்து பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ள முடியும்.

எல்பிஜி சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இது எதற்காக என்றால், சாமானிய மக்களால் அதிக விலை கொடுத்து சிலிண்டர் வாங்க முடியாது என்பதாலும், அனைவருக்கும் சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்பதாலும், அரசு கணிசமான தொகையை மானியமாக வழங்குகிறது.

Cash Transfers Using Aadhaar!

மேலும் பாதுகாப்பான, துரிதமான சமையலுக்கும் இது உத்தரவாதம் அளிப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசு மானியம் கொடுத்து மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

இந்த மானியமானது, சிலிண்டர் விலையில் பாதியாக இருக்கும். குறிப்பாக வெளியில் மார்க்கெட் ரேட்டில் சிலிண்டர் ரூ. 800க்கு விற்பதாக இருந்தால், நாம் அதில் பாதியைத்தான் செலுத்தி வருகிறோம். மீதித் தொகையை அரசே மானியமாக கொடுத்து விடும்.

இதுதான் இதுவரை இருந்து வரும் நடைமுறை. இதைத்தான் தற்போது ஆதார் கார்டு மூலமாக அரசு மாற்றப் போகிறது. அதாவது இதுவரை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுத்து வந்த மானியத் தொகையை, இனிமேல் மக்களிடமே நேரடியாக வழங்கவுள்ளது அரசு.

இந்த முடிவுக்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. அதாவது தற்போது பலர் ஒரே வீட்டில் பல்வேறு பெயர்களில் நிறைய காஸ் இணைப்புகளை வைத்துள்ளனர். இதை கண்டுபிடித்து ஒழிக்க முடியாத நிலை நிலவுகிறது. இனிமேல் அது நடக்காது.

ஒரு குடும்பத்துக்கு ஒரு காஸ் இணைப்பு இருந்தால் மட்டுமே ஆதார் எண்ணைக் காட்டி மானியத் தொகையை வங்கி மூலம் பெற முடியும். இதன் மூலம் முறைகேடாக காஸ் சிலிண்டர்களைப் பெற்று அனுபவித்து வரும் செயலுக்கு முடிவு கட்டப்படும்.

ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆதார் எண் மட்டுமே கொடுக்கப்படும். எனவே பல காஸ் சிலிண்டர் இணைப்புகளை வைத்திருந்தாலும் அது இனி வேலைக்கு ஆகாது. எனவேதான் ஆதார் கார்டையும், காஸ் சிலிண்டர் மானியத்தையும் இணைத்துள்ளது மத்திய அரசு.

மேலும் இந்த ஆதார் எண்ணைக் காட்டி நமது வங்கிக் கணக்கில் பதிவு செய்து விட வேண்டும். காஸ் ஏஜென்சியிடமும் நமது வங்கிக் கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டும். காஸ் சிலிண்டர் நமக்கு கிடைக்கும்போது அதற்குரிய மானியத் தொகை இந்த வங்ககிக் கணக்கில் போய்ச் சேர்ந்து விடும்.

ஒருவர் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாறுவதாக இருந்தால்.. என்ன செய்யலாம். காஸ் ஏஜென்சிக்கு முன்கூட்டியே இதைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நமது புது வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் அவர்களுக்கு அப்டேட் செய்தால் போதுமானது.

மேலும் இன்னொரு உபயோகமும் இந்த ஆதார் எண் மூலம் நமக்குக் கிடைக்கும். அதாவது, நமக்கு யாராவது எங்கிருந்தாவது பணம் அனுப்புவதாக இருந்தால் நமது ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். நமது வங்கிக் கணக்கில் அந்தப் பணம் லட்டு போல வந்து உட்கார்ந்து விடும்.

இதுவரை இந்த பணப் பரிமாற்ற வசதியை கிட்டத்தட்ட 3 கோடி பேர் நமது நாட்டில் பயன்படுத்தி வருகிறார்களாம். வெற்றிகரமாக அது செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பலமுனைப் பயன்பாட்டுக்கு இந்த ஆதார் எண் பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சம்பளப் பணத்தை கிரெடிட் செய்வது உள்பட அனைத்தையும் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளும் நிலைமை வரலாம்.

சுருக்கமாக சொன்னால் பல்வேறு எதிர்கால ஆதாயங்களுக்கு ஆதாரமாக விளங்கப் போகிறது இந்த ஆதார் என்றால் மிகையில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
People always wonder what Aadhaar has got to do with Cash Transfers - and specifically for LPG cylinders. The concept is really quite simple. In India, the government gives all residents a rebate on LPG cylinders - the intent is to enable people to move from kerosene and other unhealthy methods of cooking to a cleaner and safer method - and not worrying about the incremental cost (if any). As such even though the market price for a cylinder is about Rs. 800, we pay Rs. 400.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more