சிபிஐ இயக்குநராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா நியமனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இயக்குநராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய இயக்குநர் அனில் சின்ஹாவின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு சிபிஐ இயக்குநராக அனில் சின்ஹா நியமிக்கப்பட்டார். அப்போது ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட வழக்குகளில் சிபிஐ கூண்டுக் கிளியாக செயல்படுகிறது என உச்சநீதிமன்றம் சாடியிருந்த நேரம்.

CBI gets new director Rakesh Asthana

பீகாரைச் சேர்ந்த அனில் சின்ஹாவின் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ராகேஷ் அஸ்தானாவை புதிய இயக்குநராக மத்திய அரசு நியமித்துள்ளது.

குஜராத் மாநில ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, சிபிஐ கூடுதல் இயக்குநராக பணியாற்றியவர்.

Gujarat-cadre IPS officer Rakesh Asthana, Additional Director in CBI, given charge of the agency's Director.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Gujarat-cadre IPS officer Rakesh Asthana, Additional Director in CBI, given charge of the agency's Director.
Please Wait while comments are loading...