வருது வருது... எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் வருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுசுகாதாரத்துறையின் இயக்குனர் பேராசிரியர் ஜக்திஷ் பிரசாத் மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுடன் இணைந்து எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ் மாணவர்கள் மருத்துவ அறிவியலின் பல பாடங்களை தற்போது ஆழமாக படித்து வருகின்றனர்.

 Central government is in consideration with MCI to change MBBS syllabus

இது தேவையற்றது என்பதோடு அவர்கள் படிக்க நினைக்கும் மருத்துவ அறிவியலை சிறப்புப் பிரிவாக எடுத்து படித்து தெரிந்து கொள்ள புதிய பாடத்திட்டடம் உதவும். புதிய பாடத்திட்டம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் தயார் செய்யப்பட்டுவிடும் என்று பேராசிரியர் பிரசாத் கூறியுள்ளார்.

எம்பிபிஎஸ் படிப்பவர்களுக்கு 10 வெவ்வேறு அறுவை சிகிச்சைகள் குறித்து கற்றுத் தருவதற்கு தேவையில்லை, ஏனெனில் அர்கள் பொது சுகாதாரம் தொடர்பானவைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப் போகின்றனர். எனவே அதற்குத் தேவையான பாடத்திட்டம் இருந்தாலே போதுமானது. மாணவர்கள் அனாடமி, பிசியாலஜி, பேதாலஜி உள்ளிட்டவற்றை நன்று படித்து கற்றுத் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Director of Health services, jagdish prasad said that central government is taking steps to change the MBBS syllabus within one and half years and the consultation is going on with MCI in this regard.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற