For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல ஹைகோர்ட் அனுமதி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை சென்னை ஹைகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கிய விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது

Chennai high court allows Karti Chidambaram to travel abroad

அவரை தேடப்படும் நபராக அறிவித்து சிபிஐ, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது. இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே தனிப்பட்ட தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணையின்போது, கார்த்தி வெளிநாடு செல்வதற்கு சி.பி.ஐ. தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாததால் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும், வெளிநாடு சென்றால் சாட்சிகளை அழித்துவிடுவார் என்றும் சிபிஐ வாதாடியது.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, . வழக்கு உள்ளது என்பதற்காக கார்த்தியின் உரிமையை பறிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.

நாளை முதல் பிப்ரவரி 28ம் தேதி வரையிலான கார்த்தி சிதம்பரத்தின் பயணத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளனர் நீதிபதிகள். இந்த பயணத்திட்டம் தொடர்பான முழு தகவல்களையும் சிபிஐக்கு முன்கூட்டியே அளிக்க வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே கார்த்தி சிதம்பரம் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

English summary
The Madras high court on Friday green signalled the overseas travel plans of Karti Chidambaram, despite strong objections from the CBI in view of pending lookout circulars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X