For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருணாச்சல பிரதேசத்திற்குள் ரோடு போட வந்த சீனா.. விரட்டி அடித்த இந்திய ராணுவம்!

சீனா ராணுவம் இந்திய எல்லைக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வந்து சாலை அமைக்க முயற்சி செய்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

இட்டாநகர்: சீனா ராணுவம் இந்திய எல்லைக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வந்து சாலை அமைக்க முயற்சி செய்து இருக்கிறது. இந்தியா ராணுவ வீரர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று சீனா வீரர்களை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களாக இந்தியா -சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை எல்லையில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டது.

China troops sent back by Indian army after entered 1 Km into LAC

இந்த நிலையில் தற்போது சீன ராணுவம் அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைந்து இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்துள்ளது. டிசம்பர் 28ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக ராணுவ தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் மட்டும் இல்லாமல் சீனாவில் இருந்து சாலை அமைக்கும் பணியாளர்களும் வந்து இருக்கிறார்கள். இவர்கள் அருணாச்சல பிரதேச பகுதியில் சாலை அமைப்பது குறித்து அளவு எடுத்து இருக்கிறார்கள்.

இந்த விஷயம் தெரிந்து இந்திய ராணுவம் உடனடியாக அங்கு சென்று இருக்கிறது. இதனால் இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின் இந்திய ராணுவ படை ஆயுதங்களுடன் அங்கு சென்று இருக்கிறது.

இதையடுத்து சீனா அங்கு இருந்து பின் வாங்கியது. அதுமட்டும் இல்லாமல் அவர்கள் கொண்டு வந்த சாலை அமைக்கும் உபகரணங்களையும் அதே இடத்தில போட்டுவிட்டு அவர்கள் சென்று இருக்கிறார்கள் என்று ராணுவ தரப்பு கூறியிருக்கிறது.

இதற்கு முன்பே ஏற்கனவே டோக்லாமில் சீனா நீண்ட அகலமான சாலைகள் அமைக்கமுயற்சி செய்தது. இதற்காக அப்போது நிறைய பணியாளர்களும், ராணுவ வீரர்களும் அங்கு குழுமி உள்ளனர்.

English summary
China troops sent back by Indian army after entered 1 Km into Arunachal Pradesh. They have crossed the LAC for the road constructing work. Already China is playing Dokalam for road construction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X