For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவி செட் டாப் பாக்ஸில் 'சிப்' பொறுத்தி பாஜக வேவு பார்க்க போறாங்க: காங்கிரஸ் பரபரப்பு புகார்

தொலைக்காட்சி செட் டாப் பாக்ஸில் ‘சிப்’ பொறுத்தி மக்களை வேவு பார்க்க பாஜக முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் புகார் எழுப்பியுள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : தொலைக்காட்சி செட் - டாப் பாக்ஸில் 'சிப்' பொறுத்துவதன் மூலம், மக்களின் தனிப்பட்ட விஷயங்களை வேவு பார்க்க பாஜக முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுரஜ்வாலா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி செட் - டாப் பாக்ஸில் புதிய சிப் ஒன்று பொருத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் தொலைத்தொடர்பு கண்காணிப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் புதிய செட் -டாப் பாக்ஸ் கருவிகளில் இந்த 'சிப்' விரைவில் பொருத்தப்பட உள்ளது.

Chips on TV Set Top Boxes which affects People Privacy

இந்த 'சிப்' மூலம், தொலைக்காட்சி சேனல்களில் எந்த நிகழ்ச்சிகளை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள், எந்த தொலைக்காட்சி சேனல் முதலிடத்தில் உள்ளது என்பதை அறிவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலம், மக்கள் எந்த தொலைக்காட்சியை எவ்வளவு நேரம் காண்கிறார்கள் என்பதை உறுதி செய்ய முடியும் என்றும், அதன் மூலம் விளம்பரதாரர்கள், விளம்பர இயக்குநரகம் ஆகியவைகளுக்கு, எந்தத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம் என்று அறிவதன் மூலம் மத்திய அரசு விழிப்பு உணர்வு விளம்பரங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுரஜ்வாலா ட்விட்டரில் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மத்திய அரசு மக்களை வேவு பார்க்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. மக்களின் வீடுகளுக்குள் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் விஷயத்தை கண்காணிப்பது மத்திய அரசின் கடமை அல்ல. 'சிப்' பொருத்தும் மத்திய அரசின் நோக்கம் வேறு மாதிரியானது என்று எச்சரித்துள்ளார்.

English summary
Chips on TV Set Top Boxes which affects People Privacy says Congress Leader Randeep Singh Surejwala on Twitter. Earlier government's reported proposal to install chips in new television set-top boxes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X