For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. இயேசு பிறந்த பெத்லகேமிலும் கோலாகலம்!

கிறிஸ்துமஸ் திருநாள் இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் புத்தாடை அணிந்தும் கேக் வழங்கியும் கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த ஊரான பெத்லகேமிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பெத்லகேமில் டிசம்பர் 25ஆம் தேதி பிறந்தார் இயேசுநாதர். இந்த நாள் இன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

Christmas celebrating in Bethlehem...

இயேசு பிறந்த இடமான பெத்லகேம் நகர் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மக்கள் புத்தாடை அணிந்து கேக்குகளை ஒருவருக்கொருவர் வழங்கி கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தின் அருகாமையில் உள்ள பழமையான ஒரு தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

கிறிஸ்துமஸ் நாளையொட்டி இந்த பழமைவாய்ந்த தேவாலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேவாலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரமும் மின்விளக்குளால் ஜொலித்தது.

கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி இந்த தேவாலயத்தில் சிறப்பு ஜெபங்களும் ஆராதனைகளும் நேற்றிரவு முதல் விடிய விடிய நடைபெற்றது. இதில் உள் நாட்டு மக்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.

தேவாலயத்தில் நடைபெற்ற கூட்டுப்பிரார்த்தனையில் கலந்துகொண்டவர்கள் இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் முன்பு குடும்பம் குடும்பமாக செல்பீ எடுத்துக் கொண்டனர்.

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு தேவாலயப் பகுதியில் நடைபெற்ற வான வேடிக்கை நிகழ்ச்சியை சிறுவர் சிறுமியர் முதல் பெரியர்வர்கள் வரை ஏராளமானோர் கண்டுகளித்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

இந்தியாவிலும் இன்று கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு கூட்டு பிரார்த்தனைகளிலும் கிறிஸ்தவர்கள் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.

English summary
Christmas festival is celebrating by christian people throughout the country. In Bethlehem where Jesus born there also people celebrating Christmas enthusiastically. people wearing new dress and wishing each other for Christmas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X