For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“பொதுசிவில் சட்டம்” - அடுத்த பரபரப்புக்கு தயாராகிறதா இந்தியா? விதைபோடும் உத்தராகண்ட் பாஜக அரசு

Google Oneindia Tamil News

டேராடூன்: அனைத்து மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக 2 வது முறையாக பதவியேற்றுக் கொண்ட புஷ்கர் சிங் மறுநாளே பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என அவர் உறுதியளித்தார்.

இதில் முக்கிய வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை நிச்சயம் கொண்டு வருவோம் என அவர் தெரிவித்து இருந்தார்.

தாண்டியா ஆட்டமும் ஆட.. பாஜக கூட்டமும் கூட! களைகட்டிய செயற்குழு! நம்ம குஷ்புதான்.. என்னமா ஆடுறாங்க! தாண்டியா ஆட்டமும் ஆட.. பாஜக கூட்டமும் கூட! களைகட்டிய செயற்குழு! நம்ம குஷ்புதான்.. என்னமா ஆடுறாங்க!

குழு அமைப்பு

குழு அமைப்பு

இந்த நிலையில் கடந்த மே மாதம் உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தவும் அதை சரி பார்க்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லை நிர்ணய ஆணைய தலைவராக இருக்கும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு அமைத்து இருக்கிறது. ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோலி, சமூக ஆர்வலர் மனு கவுர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சத்ருகன் சிங், பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா தங்க்வால் உள்ளிட்டோர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 உத்தராகண்ட் முதலமைச்சர் பேச்சு

உத்தராகண்ட் முதலமைச்சர் பேச்சு

இந்த நிலையில் உத்தராகண்டின் சிங் நகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய புஷ்கர் சிங் தாமி, ஒவ்வொரு மாநிலங்களிலும் சொந்தமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தியாவிலேயே கோவில் மட்டும்தான் பொதுசிவில் சட்டம் அமலில் இருக்கிறது என்றார்.

 2009-ல் அறிவித்த அத்வானி

2009-ல் அறிவித்த அத்வானி

இந்தியாவிலேயே பொதுசிவில் சட்டத்தை முதன்முதலில் கொண்டு வர இருக்கும் மாநிலம் உத்தராகண்ட்தான் என புஷ்கர் சிங் தாமி அப்போது தெரிவித்து இருந்தார். கடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போதே பாஜக வெற்றிபெற்றால் நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அத்வானி உறுதியளித்தார். 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும் பாஜக பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தது.

பொதுசிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

பொதுசிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

இந்த நிலையில், இந்த சிறப்பு சட்டங்களை நீக்கிவிட்டு பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் பல நாள் திட்டமாக உள்ளது. ஆனால், அவ்வாறு அறிவிக்கப்படுவது அரசியலமைப்புக்கும் சிறுபான்மையினர்களுக்கும் எதிரானது என்றும் இந்தியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்தானது எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

English summary
Uttarkhand CM Pushkar singh dhami adviced other states to implement Uniform civil code: அனைத்து மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X