For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் என்ன போராடினாலும் காங்.க்கு 61 இடங்கள்தான்- இதுக்கு பேருதான் கிணத்துல போட்ட கல்லு!

குஜராத்தில் காங்கிரஸுக்கு அதிகபட்சம் 61 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது தற்போதைய கருத்து கணிப்புகளும் கூட.

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத்தில் தலைகீழாக நின்று போராடினாலும் கூட சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸுக்கு அதிகபட்சம் 61 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது களநிலவரம்.

குஜராத்தைப் பொறுத்தவரையில் 1990களில் ஆட்சியை பறிகொடுத்ததுதான்..அதன் பின்னர் அந்த கட்சியில் குஜராத்தில் எழவே முடியாத பரிதாப நிலையில்தான் இருக்கிறது.

பாஜகவைப் பொறுத்தவரையில் தொடக்கத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது; பின்னர் 1998 முதல் தனிப் பெரும்பான்மையுடன் 115 இடங்களுக்கு குறையாமல் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டே வருகிறது.

4 முறை தொடர் வெற்றி

4 முறை தொடர் வெற்றி

1998ம் ஆண்டு 117; 2002-ல் 127 இடங்களில் பாஜக வென்றது. 2007-ல் 117; 2012-ல் 115 இடங்களில் வென்று தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு வருகிறது பாஜக. கேசுபாய் படேலைத் தொடர்ந்து 2001-ம்ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நரேந்திர மோடி பாஜகவின் அசைக்க முடியாத முதல்வராக குஜராத்தில் கோலோச்சினார்.

அதிகபட்சம் 61 தான்

அதிகபட்சம் 61 தான்

காங்கிரஸைப் பொறுத்தவரையில் 1995-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 45 முதல் அதிகபட்சம் 61 இடங்கள் வரைதான் வெல்ல முடிந்திருக்கிறது. 61 இடங்களை காங்கிரஸ் கட்சியால் தாண்டவே முடியாத பரிதாப நிலைதான் நீடிக்கிறது.

45 முதல் 61 இடங்கள்

45 முதல் 61 இடங்கள்

1995-ல் 45; 1998-ல் 53 இடங்களை காங்கிரஸ் வென்றது. 2002-ல் 51; 2007-ல் 59; 2012-ல் 61 இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ்.

கள நிலவரம்

கள நிலவரம்

தற்போது நடைபெற உள்ள தேர்தல்களிலும் கூட பாஜக, காங்கிரஸின் நிலைமை கடந்த தேர்தல்களைப் போலத்தான் தொடரும் என கூறுகின்றன கருத்து கணிப்புகள். பாஜகவைப் பொறுத்தவரையில் 115 முதல் அதிகபட்சம் 122 இடங்கள்; காங்கிரஸ் அதிகபட்சம் 61 இடங்கள்தான் என்கின்றன கருத்து கணிப்புகள்.

அந்தோ பரிதாபம்!

English summary
The Congress has not crossed the figure of 61 in the Gujarat Assembly since 1995.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X