For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசுக்கு எதிராக பிரசாரம்- காங். ஆளும் 9 மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் வியூகம்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு கொடுக்கவும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ளவும் டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் ஆளும் 9 மாநிலங்களின் முதல்வர் கூட்டத்தில் வியூகம் வகுக்கப்பட்டது.

லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது காங்கிரஸ். இதனால் அக்கட்சி பெரும் சுணக்கத்தை எதிர்கொண்டது.

அதன் பின்னர் திடீரென காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 56 நாட்கள் வெளிநாடு ஒன்றுக்குப் போனார். இது இந்திய அரசியல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் ராகுல் நாடு திரும்பியதும் முதிர்ந்த அரசியல்வாதியைப் போல அவரது செயல்பாடும் பேச்சும் அமைந்துவிட காங்கிரசார் உற்சாகம் காட்டத் தொடங்கினர். அத்துடன் ராகுலும் மாநிலம் மாநிலமாக பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இக் கூட்டம் இன்று நடைபெற்றது.

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம். அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர், மேகாலயா ஆகிய 9 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் மணிப்பூரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் பாரதிய ஜனதா அரசுக்கு நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்படக் கூடிய பிரசார யுக்திகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு அஸ்ஸாம், கேரளா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டது.

English summary
Seeking to rejuvenate the Congress after its worst debacle in Lok Sabha polls, Sonia Gandhi is meeting party chief ministers on Tuesday to devise strategy to take forward the fight against the Modi government by highlighting its failur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X