For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமரீந்தர்சிங்கை வீழ்த்தி சித்து நேற்று சிக்சர்- இன்று டக்அவுட்! பஞ்சாப் புதிய முதல்வரானார் சரண்ஜித்

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான நவ்ஜோத்சிங் சித்துவுக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் அவருக்கு முதல்வர் பதவியை தரவில்லை காங்கிரஸ் மேலிடம்.

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர்சிங்குக்கு எம்.எல்.ஏக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அமரீந்தர்சிங் மீது அதிருப்தி தெரிவித்தனர்.

இதனையடுத்து முதல்வர் பதவியை அமரீந்தர்சிங் நேற்று ராஜினாமா செய்தார். மேலும் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் 3 முதல் 5 வரை 20-வது தமிழ் இணைய மாநாடு- ஆய்வுக் கட்டுரைகளை எப்போது எப்படி அனுப்புவது?டிசம்பர் 3 முதல் 5 வரை 20-வது தமிழ் இணைய மாநாடு- ஆய்வுக் கட்டுரைகளை எப்போது எப்படி அனுப்புவது?

 அம்பிகா சோனிக்கு வாய்ப்பு

அம்பிகா சோனிக்கு வாய்ப்பு

இதனால் பஞ்சாப் புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று இரவு முதல் நடைபெற்று வருகிறது. டெல்லி மேலிடத்தைப் பொறுத்தவரை அவர்களது சாய்ஸ் மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி. நேருவின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவராக அம்பிகா சோனியின் தந்தை இருந்தார். இந்திரா காந்தியால் 1969-ல் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர் அம்பிகா சோனி.

 முதல்வர் பதவியை நிராகரித்த அம்பிகா சோனி

முதல்வர் பதவியை நிராகரித்த அம்பிகா சோனி

ஆனால் தம்மை தேடிவந்த முதல்வர் பதவியை அம்பிகா சோனி ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்பிகா சோனி, பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை சீக்கியர் ஒருவர்தான் முதல்வராக வேண்டும். எனக்கு பஞ்சாப் மாநிலத்துடன் ஆழமான தொடர்பு இருந்தாலும் சீக்கியர் ஒருவருக்குத்தான் வாய்ப்பு தர வேண்டும். அதனால் முதல்வர் பதவியை வேண்டாம் என நிராகரித்துவிட்டேன் என்றார்.

புதிய முதல்வராகும் சரண்ஜித்சிங்

புதிய முதல்வராகும் சரண்ஜித்சிங்

இதனைத் தொடர்ந்து சண்டிகரில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புதிய முதல்வர் குறித்து விவாதித்தனர். இந்த ஆலோசனைகளில் முதலில் அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தாவா, புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சரண்ஜித்சிங் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான சித்துவும் முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் சித்துவுக்கு அமரீந்தர்சிங் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் சித்துவுக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் மேலிடம் தர மறுத்துவிட்டது.

 தேர்தல் வியூகம்- 2 துணை முதல்வர்கள்

தேர்தல் வியூகம்- 2 துணை முதல்வர்கள்

மேலும் 2 துணை முதல்வர்களை நியமிக்கவும் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாம். தலித் ஒருவருக்கும் தலித் அல்லாத இந்து ஒருவருக்கும் துணை முதல்வர் பதவிகள் தரப்பட உள்ளனவாம். பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அனைத்து சமூகத்தினரையும் திருப்திபடுத்தும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

English summary
Congress High Command has denied Punjab CM Post to Navjot Singh Sidhu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X