For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நோட்டா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங். கட்சிகளால்தான் குஜராத்தில் ஆட்சியை பிடித்த பாஜக!

நோட்டா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஓட்டுகளைப் பிரித்த காரணத்தால்தான் பாஜக குஜராத்தில் ஆட்சியில் அமரவே முடிந்திருக்கிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணம் பகுஜன் சமாஜ், நோட்டா தான்- வீடியோ

    அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பாஜக உண்மையிலே பெருநன்றியை சொல்ல வேண்டியது நோட்டா, பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்குத்தான். இந்த கட்சிகளால்தான் 8 தொகுதிகளில் காங்கிரஸ் சொற்ப வாக்குகளில் தோல்வியைத் தழுவ பாஜக எளிதாக வென்று ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறது. என்கின்றன தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்கள்.

    குஜராத்தில் 99 இடங்களைப் பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பாஜக 99, காங்கிரஸ் 77, தேசியவாத காங்கிரஸ் 1, பாரதிய பழங்குடி கட்சி 2, சுயேட்சைகள் 3 இடங்களைப் பெற்றுள்ளன.

    குஜராத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 92. இதற்கும் கூடுதலாக 7 தொகுதிகளைப் பெற்று அரியாசனத்தில் பாஜக அமர்ந்துவிட்டது.

    உண்மையில் இந்த தொகுதிகள் என்பது நோட்டா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டு காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை பறித்ததால் பாஜகவுக்கு கிடைத்தவைதான். பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், நோட்டா புண்ணியத்தால் பாஜக வென்ற தொகுதிகள் விவரம்:

     தோல்கா நிலவரம்

    தோல்கா நிலவரம்

    தோல்கா தொகுதியில் 327 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வென்றிருக்கிறது. பாஜக- 71,530; காங்கிரஸ்- 71,203; சுயேச்சை- 4,222, பகுஜன் சமாஜ்- 3,139, நோட்டா- 2347;' தேசியவாத காங்கிரஸ்- 1,198; இங்கும் பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், நோட்டா இல்லையெனில் பாஜக மண்ணைக் கவ்வியிருக்கும்.

     பதேபுரா வாக்குகள் விவரம்

    பதேபுரா வாக்குகள் விவரம்

    பதேபுரா தொகுதியில் 2711 வாக்குகளில் பாஜக வென்றது. இங்கு பாஜக 60,250; காங்கிரஸ் 57,539 வாக்குகளைப் பெற்றிருந்தன. 2711 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வென்றது. இத்தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் பெற்ற வாக்குகளோ 2,747. பகுஜன் சமாஜ் 1186; நோட்டா 4,573 வாக்குகளைப் பெற்றிருந்தது. தேசியவாத காங், பகுஜன் சமாஜ் இரண்டும் காங்கிரஸுடன் கை கோர்த்திருந்தால் பாஜக தலைதெறிக்க ஓடியிருக்கும்.

     போடாபுட் கட்சிகள் வாக்குகள்

    போடாபுட் கட்சிகள் வாக்குகள்

    போடாட் தொகுதியில் 906 வாக்குகளில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. இங்கு பாஜக 79,623; காங்கிரஸ் 78,717 வாக்குகளைப் பெற்ரது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 966 வாக்குகளையும் நோட்டா 1334, தேசியவாத காங்கிரஸ் 656 வாக்குகளையும் பெற்றது. இங்கும் பாஜக மண்ணைக் கவ்வியிருக்க வேண்டியது. வாக்குகள் பிரிந்ததால் வென்றுவிட்டது.

     போடாபுட் கட்சிகள் வாக்குகள்

    போடாபுட் கட்சிகள் வாக்குகள்

    போடாட் தொகுதியில் 906 வாக்குகளில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. இங்கு பாஜக 79,623; காங்கிரஸ் 78,717 வாக்குகளைப் பெற்ரது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 966 வாக்குகளையும் நோட்டா 1334, தேசியவாத காங்கிரஸ் 656 வாக்குகளையும் பெற்றது. இங்கும் பாஜக மண்ணைக் கவ்வியிருக்க வேண்டியது. வாக்குகள் பிரிந்ததால் வென்றுவிட்டது.

     1855 வாக்குகளில் தோல்வி

    1855 வாக்குகளில் தோல்வி

    போர்பந்தர் தொகுதியில் 1855 வாக்குகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் மோத்வாதியா தோற்றுப் போனார். இங்கு பாஜக 72,430; காங்கிரஸ் 70,575 வாக்குகளைப் பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சி 4,337 வாக்குகளையும் நோட்டா 3433 வாக்குகளையும் அள்ளியதால் காங்கிரஸின் வெற்றி பறிபோனது.

     விஜாபூர் நிலவரம்

    விஜாபூர் நிலவரம்

    விஜாபூரில் 1,164 வாக்குகளில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. இத்தொகுதியில் பாஜக 72,326; காங்கிரஸ் 71,162; தேசியவாத காங்கிரஸ் 1037, பகுஜன் சமாஜ் 621, நோட்டா 1280 வாக்குகளைப் பெற்றது. பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் வாக்குகள் பிரிந்ததால் பாஜக சொற்ப வாக்குகளில் வென்றுவிட்டது.

    English summary
    According to the Election Commission data the Congress party lost 8 seats by victory margin between 200 And 3,000 in Gujarat Assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X