Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ.. இளைஞர் கைது.. போலீசார் கண்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

அஹமதாபாத்: மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    வீர மரணமடைந்த பிபின் ராவத் குறித்து அவதூறு... கருத்து பகிர்ந்த நபர் கைது..!

    இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முதல்நாள் குன்னூரில் விபத்துக்கு உள்ளானது. இதில் பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியில் இன்று இவர்களுக்கு இறுதி மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

    துக்கம்

    துக்கம்

    இவர்களின் மறைவிற்கு மொத்த இந்தியாவே துக்கம் அனுசரித்து வருகிறது. நாடு முழுக்க மக்கள் பலர் இவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் சிலர் பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மரணம் குறித்து சந்தேகம் எழுப்பி சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    குஜராத்தை சேர்ந்த நபர்

    குஜராத்தை சேர்ந்த நபர்

    இதையடுத்து இந்த விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது. இதை பற்றி விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும். விபத்து தொடர்பான உண்மைகள் வெளிவரும் வரை தேவையின்றி யூகம் செய்யாதீர்கள், என்று தெரிவித்துள்ளது.

    குஜராத்தை சேர்ந்த நப

    குஜராத்தை சேர்ந்த நப

    இந்த நிலையில்தான் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த ஷிவாபாய் ராம் என்ற நபர்தான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிபின் ராவத் மரணம் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    பேஸ்புக்

    பேஸ்புக்

    Shivabhai Ahir என்ற தனது பேஸ்புக் பக்கத்தில் இவர் இந்த வீடியோவை வெளியிட்ட நிலையில் அவர் கைதானார். இந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுவிட்டது. பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இவர் பேசியதாக கூறப்படுகிறது. இவரை கைது செய்த குஜராத் போலீசார், அவர் வெளியிட்ட வீடியோவிற்காக மட்டும் கைது நடக்கவில்லை.

    வழக்கு

    வழக்கு

    அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதற்கு முன்பே இப்படி நிறைய போஸ்ட்களை செய்துள்ளார். இதற்கு முன்பும் சில அரசியல் தலைவர்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் தவறாக பேசி உள்ளார். இதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுத்தோம் என்று கூறியுள்ளனர். 153-A, 295-A ஆகிய பிரிவுகளின் கீழ் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான்

    ராஜஸ்தான்

    அதேபோல் ராஜஸ்தானிலும் இதே காரணத்திற்காக இன்னொரு இளைஞர் கைது செய்யப்பட்டார். பிபின் ராவத் மரணம் குறித்து தவறாக பேசிய ஜவாத் கான் என்ற இளைஞர் ராஜஸ்தான் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+