For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைய முயன்ற இரு இந்திய இளைஞர்கள்.. திருப்பி அனுப்பிய துருக்கி அதிகாரிகள்!

துருக்கியில் உள்ள ஐஎஸ் அமைப்பில் இந்திய இளைஞர்கள் இணைய முயன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டுபிடித்த துருக்கி அதிகாரிகள் 2 பேரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவை சேர்ந்த 2 இளைஞர்கள் துருக்கியில் உள்ள ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றுள்ளனர். இதனை கண்டுபிடித்த அந்நாட்டு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு திருப்பியனுப்பியுள்ளனர்.

ஹைதராபாத் மற்றும வாரங்கல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள குஃப்ரான் மற்றும் ஹமீத். நண்பர்களான இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். இதுதொடர்பான நடவடிக்கையில் இணையதளம் மூலம் ஈடுபட்ட அவர்கள் அமெரிக்கா, சவுதி அரேபியா வழியாக துருக்கி சென்றுள்ளனர்.

Counselling for 2 Indians Who were attempting to join in ISIS

பின்னர் அங்கிருந்து சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் சேர முயற்சிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து இந்திய அரசின் நடவடிக்கையின்படி துருக்கியில் இருந்த அவர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். 4 மாதம் சிறையில் இடைங்ககப்பட்ட அவர்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு திருப்பியனுப்பட்டனர்.

2 பேரிடமும் போலீசார் மற்றும் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றது தெரிய வந்தது இதையடுத்து 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்க முடிவு செய்யப்பட்டு தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.

இருப்பினும புலனாய்வுத்துறை மற்றும காவல்துறையினர் அவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

English summary
two Indians were send from turkey to India Who were attempting to join in the ISIS. Those two were belongs to Hydrabad and Warangal. After reaching to india they are under the custody of Police and Intelligence bureau. the officials giving counseling to them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X