ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கொலை மிரட்டல்... குற்றவாளியைப் பிடிக்க போலீஸ் வலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

வாழும் கலை என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் மனநல பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமாக பல ஆசிரமங்களும் உள்ளன.

Death threat for sri sri ravishankar

பெங்களூருவில் உள்ள கனகபுரா சாலையில் வாழும் கலை ஆசிரமம் ஒன்றும் உள்ளது. இதன்மீது ஏற்பட்ட முன்பகை காரணமாக, ஹரஹள்ளி ரவீந்திரா என்பவர், ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை நடுரோட்டில் நிற்க வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும் எனக் கூறியிருந்தார். இதன்பேரில், ஆசிரம நிர்வாகி நிக்கிலேஷ் போலீசில் புகார் செய்தார்.

அவர்கள் குறிப்பிட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்து, தேடிவருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு நேரடி தொடர்பு உள்ளதா, என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Death threat for Sri Sri Ravishankar in Facebook. Karnataka police filed case and searching the facebook user.
Please Wait while comments are loading...