உ.பி இடைத்தேர்தல் தோல்வி பாஜகவுக்கு அவமானம்.. சித்தராமையா தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் தோல்வி அவமானகரமானது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர், புல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்யநாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.

Defeat in the UP by-election of Chief Minister and the Vice-Chancellor's constituency is insult for BJP: Siddaramaiah

அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ததால் அந்த இரு மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இந்த இருதொகுதிகளிலும் பாஜக படுதோல்வியடைந்துள்ளது. சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். அதாவது உபி முதல்வர் மற்றும் துணை முதல்வர் வென்ற தொகுதிகளில் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் தோல்வி அவமானகரமானது என அவர் கூறியுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளதாக சமாஜ்வாதி, பகுஜன் கட்சிகளுக்கு வாழ்த்துக்களையும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பாஜக அல்லாத கட்சிகளுக்கு இடையிலான ஒன்றுமையே வெற்றிக்காரணம் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka Chief Minister Siddaramaiah has said that the defeat of the BJP in the by-election of Chief Minister and the Vice-Chancellor's constituency is insult for BJP. He also congratulated the Samajwadi Party and the Bahujan Samaj Party.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற