For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானம் கிளம்ப தாமதமானால் சம்பளம் 'கட்': அதிர்ச்சியில் ஏர் இந்தியா ஊழியர்கள்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: விமானம் புறப்பட காலதாமதமாக காரணமாக இருக்கும் ஏர் இந்தியா ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று விமான போக்குவரத்து துறை செயலாளர் வி. சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே நஷ்டத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் விமானங்கள் அடிக்கடி தாமதமாக புறப்படுவதால் பயணிகள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் விமான போக்குவரத்து துறை செயலாளர் வி. சோமசுந்தரம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு,

தாமதம்

தாமதம்

விமானம் தாமதாக கிளம்ப காரணமாக இருக்கும் விமானிகள், சிப்பந்திகள், பொறியாளர்கள், உணவு வழங்குபவர்கள் ஆகியோரின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று சோமசுந்தரம் அறிவித்துள்ளார்.

அமல்

அமல்

இந்த சம்பள பிடித்த சட்டம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. விமானங்கள் தாமதாக கிளம்புவதை தவிர்க்கவே சோமசுந்தரம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிப்பந்திகள்

சிப்பந்திகள்

சிப்பந்திகள் பற்றாக்குறையை போக்க ஏர் இந்தியாவுக்கு 800 புதிய சிப்பந்திகள் பணியமர்த்தப்படுவார்கள் என்று சோமசுந்தரம் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிட்ட ஒருவாரத்திற்குள் சம்பள பிடித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

சம்பள பிடித்தம் குறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று விமானி ஏ.கே. கோவிள் கூறுகையில், விமானம் தாமதமாக காரணமாக இருக்கும் விமானிகள், சிப்பந்திகள், பொறியாளர்கள், கேட்டரிங் ஆட்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். விமானம் தாமதமாக கிளம்புவதால் ஏற்படும் நஷ்டம் அவர்களின் சம்பளம் மூலம் சரிகட்டப்படும். தொடர்ந்து தாமதமாக பணிக்கு வருவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

English summary
Aviation secretary V. Somasundaram has ordered that the salary of those employees including pilots and crew of Air India will be cut if they are found to be the reason behind the flight delay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X