For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சில்லறையை எடுத்துச் செல்லலாம்.. முடியும் போது திரும்பி செலுத்தலாம்.. தேவாலயத்தில் சேவை உண்டியல்

கேரளாவில் உள்ள தேவாலயம் ஒன்று தேவையான சில்லறைகள் கொடுத்து மக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டை போக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து கடும் சில்லறைத் தட்டுப்பாடு இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைப் போக்க கேரளாவில் உள்ள தேவலாயம் ஒன்றில் சில்லறை அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் மக்களுக்கு தேவையான சில்லறைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனை ஒரு சேவையாகவே அந்த தேவாலயம் செய்து வருகிறது.

9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர், 10ம் தேதியில் இருந்து வங்கி செயல்படத் தொடங்கியது. என்றாலும் மக்கள் பழைய நோட்டைத் தான் மாற்ற முடிந்ததே தவிர செலவு செய்ய தேவையான சில்லறை நோட்டுகள் கிடைக்கவில்லை. இதனை பெறுவதற்கே மக்கள் கடும் வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க நேரிட்டது.

Demonetization: Church in Kochi opens treasury for people

அதன் பிறகு 11ம் தேதியில் இருந்து ஏடிஎம்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. என்றாலும், பெரும்பாலான மையங்கள் திறக்கப்படாமலேயே இன்னும் உள்ளன. இப்படி பல்வேறு காரணங்களால் மக்களிடம் சில்லறை நோட்டுகள் இல்லாமல் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வந்தனர். சில்லறை இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கேரளாவில் உள்ள கொச்சியில் தேவாலயம் ஒன்றில் கருணையோடு மக்களுக்கான சேவை ஒன்றை செய்து வருகிறது. கொச்சி தேவாலயத்தில் ஒரு பெரிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியில் 10, 20, 50, 100 என ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன.

சில்லறை கிடைக்காமல் அவதிப்படும் மக்கள் இங்கு வரலாம். தேவையான பணத்தை அந்தப் பெட்டியில் இருந்து எடுத்துச் செல்லாம். பின்னர், எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது திரும்பி வந்து அதே பெட்டியில் எடுத்தப் பணத்தை போட்டுவிடலாம்.

எவ்வளவு பணத்தை மக்கள் எடுக்கிறார்கள் என்பதும் எவ்வளவு பணத்தை மக்கள் திரும்ப கொண்டு வந்து போடுகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம் என்றும் மக்கள் துன்பம் அடையக் கூடாது என்பதற்காகவே தேவலாயம் இந்த சேவையில் ஈடுபட்டுள்ளது என்று தேவலாயத்தில் பாதிரியார் ஜிம்மி தெரிவித்துள்ளார்.

English summary
People across the country struggle for after demonetization, a church in Kochi of Kerala has come to the rescue the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X