For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதெப்படி 1978-ல் கம்ப்யூட்டரில் டைப் செய்த மார்க் சீட் மோடிக்கு கிடைச்சது? ஆம் ஆத்மி 'நச்' கேள்வி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடிக்கு 1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகம் வழங்கியதாக கூறப்படும் பட்டப்படிப்பு சான்றிதழ் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்டிருக்கிறது...அப்படியெனில் 1978ஆம் ஆண்டே டெல்லி பல்கலைக் கழகம் கம்ப்யூட்டரை பயன்படுத்த தொடங்கிவிட்டதா? ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் அஸுதோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் அண்மையில் மோடியின் பி.ஏ., எம்.ஏ. சான்றிதழ்களை டெல்லியில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.

ஆனால் அந்த சான்றிதழ்களே போலியானவை என ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தற்போது அந்த சான்றிதழ்கள் தொடர்பாக மேலும் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார் ஆம் ஆத்மி மூத்த தலைவர் அஸுதோஷ்.

மோடியின் சான்றிதழ்கள் தொடர்பாக அஸுதோஷ் முன்வைக்கும் கேள்விகள்:

1978-ல் கம்ப்யூட்டரா?

1978-ல் கம்ப்யூட்டரா?

1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் படித்து முடித்தவர்களின் சான்றிதழ்களில் பெயர், மதிப்பெண் விவரம் கையால்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பாஜக வெளியிட்டிருக்கும் டெல்லி பல்கலைக் கழகத்தின் மோடிக்கான சான்றிதழில் பெயரும் மதிப்பெண்களும் 'பிரிண்ட்' செய்யப்பட்டதாக இருக்கிறது. அப்படியானால் 1978ஆம் ஆண்டே டெல்லி பல்கலைக் கழகம் கம்ப்யூட்டரை பயன்படுத்தியதா?

லோகோ ஃபாண்ட்

லோகோ ஃபாண்ட்

மோடியின் சான்றிதழில் உள்ள டெல்லி பல்கலைக் கழகத்தின் லோகோ ஃபாண்ட் தற்போது பயன்பாட்டில் இருப்பது போல் நவீன வடிவில் உள்ளது. ஆனால் டெல்லி பல்கலைக் கழகம் வழங்கியிருக்கும் உண்மை சான்றிதழ்களில் ஃபாண்ட் மிக சாதாரணமாக பழைய மாடலில் இருக்கிறது. ஆக மோடியின் சான்றிதழ்கள் போலியானவையே.

எது உண்மை?

எது உண்மை?

மோடியின் சான்றிதழ்கள் உண்மை என டெல்லி பல்கலைக் கழகம் கூறுகிறது. ஆனால் மகாராஷ்டிரா சமூக ஆர்வலர் அனில் கல்காலி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 1978-ம் ஆண்டு யாரெல்லாம் படித்தார்கள் என கேள்வி எழுப்பிய போது, 30, 40 ஆண்டுகால பழமையான ஆவணங்களை பாதுகாப்பது இல்லை என இதே டெல்லி பல்கலைக் கழகம் கூறியிருக்கிறது. ஆனால் தற்போது டெல்லி பல்கலைக் கழகமோ 1970களின் ஆவணங்களை சரிபார்த்த போது மோடியின் சான்றிதழ் ஒரிஜனல் என கூறுகிறது. ஆக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு டெல்லி பல்கலைக் கழகம் பொய் சொன்னதா? 30, 40 ஆண்டுகால ஆவணங்களை பாதுகாப்பது இல்லை என்று கூறிவிட்ட நிலையில் இப்போது எதை வைத்து மோடி சான்றிதழ்கள் ஒரிஜனல்தான் என டெல்லி பல்கலைக் கழகம் கூறுகிறது?

அரசியல் சாசனத்துக்குதான் விசுவாசம்

அரசியல் சாசனத்துக்குதான் விசுவாசம்

டெல்லி பல்கலைக் கழகம் கவுரமான ஒரு பல்கலைக் கழகம். நாட்டின் அரசியல் சாசனத்துக்கு விசுவாசமானதாக இருக்க வேண்டும்.நாட்டை ஆளுகிற தலைவர்களுக்கு விசுவாசமாக இருக்க கூடாது. இவ்வாறு அஸூதோஷ் கூறியுள்ளார்.

English summary
Launching an attack on Delhi University over Prime Minister Narendra Modi’s degree, the AAP on Wednesday sought to know if the university had computers in 1978.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X