For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவால் பெரும் துயரம்.. கதறி அழுத ஆசிரியை.. ஆறுதல் கூறிய ராகுல்.. குஜராத்தில் உருக்கம்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத்தில் பிரசாரத்திற்கு சென்றிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு தன்னிடம் மாநில பாஜக அரசு குறித்து கதறி அழுதபடி பேசிய சமஸ்கிருத ஆசிரியையை கட்டி அணைத்து தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறியது அனைவரிடமும் உருக்கத்தை ஏற்படுத்தியது.

குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அவர் அகமதாபாத்தின் நிகோல் என்ற பகுதியில் உள்ள கியான் அதிகார் சபாவில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்வித்துறையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை விளக்கிப் பேசினார்.

Distressed Sanskrit teacher gets the comfort hug from Rahul Gandhi

கலந்துரையாடலின்போது ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடமும் கருத்துக்களைக் கேட்டார். அப்போது ரஞ்சனா அவஸ்தி என்ற சமஸ்கிருத ஆசிரியை எழுந்து தனது அனுபவத்தை விளக்கிப் பேசினார். இருபது வருடமாகதான் ஆசிரியை பணியாற்றி வருவதாகவும், ஆனால் குஜராத் பாஜக அரசால் மாநிலத்தில் ஆசிரியர்கள் பெரும் துயரத்தையே சந்தித்திருப்பதாகவும் அவர் விளக்கினார்.

ஆசிரியர்களுக்கு வருமான விகிதத்தை சரி செய்து தருவதாக பாஜக அரசு கூறினாலும் அதை செய்து தரவே இல்லை என்று அவர் கூறியபோது அழுது விட்டார். ம்மி விம்மி அழுத அவரைப் பார்த்த ராகுல் காந்தி மேடையை விட்டு இறங்கி ரஞ்சனாவை நெருங்கி அவரை கட்டி அணைத்துக்கொண்டு தட்டிக் கொடுத்தார். ரஞ்சனாவும் ராகுலை கட்டி அணைத்து கதறினார்.

இது அந்த இடத்தில் பெரும் இறுக்கத்தையும், உருக்கமான சூழலையும் உருவாக்கியது.

English summary
Congress Vice president Rahul Gandhi campaigned in the Gujarat assembly polls. He met a Sanskrit teacher while campaigning in Ahmadabad's Nikol and comforted her with his hug.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X