பீமா கோரேகான் கலவரத்தை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது... அம்பேத்கரின் பேரன் முழுஅடைப்பிற்கு அழைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : புனே மாவட்டம் பீமா கோரேகான் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய மஹாராஷ்டிரா மாநில அரசை கண்டித்து டாக்டர் . அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் ஆழு அமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

டாக்டர் அம்பேத்கரின் பேரனும் பரிபா பகுஜன் மஹாசங்க் அமைப்பின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் நாளை மராஷ்டிரா மாநிலத்தில் முழுஅடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று புனேவின் பீமா கோரேகான் கிராமத்தில் நடந்த கலவர்த்தை கட்டுப்படுத்தாத மாநில அரசைக் கண்டித்தே இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முழுஅடைப்பு போராட்டத்திற்கு மஹாராஷ்டிரா ஜனநாயக முன்னணி, மஹாராஷ்டிரை இடது முன்னணி மற்றும் இதர 250 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார். இந்த வன்முறை சம்பவத்திற்கு இந்து ஏக்தா அகாதிஅமைப்பே முழு காரணம் என்றும் பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

கலவரத்துக்கு யார் காரணம்?

கலவரத்துக்கு யார் காரணம்?

நேற்றைய நிகழ்ச்சியானது சம்பாஜி பிரிகேட் என்ற மராத்திய அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அகில பாரிய இந்து சபா மற்றும் பேஷ்வா குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் கூட அவர்கள் தங்களது எதிர்ப்பு நிலையில் உறுதியாக இருந்தனர்.

வன்முறையில் தலித் கொலை

வன்முறையில் தலித் கொலை

புனேவில் கிழக்கிந்திய கம்பெனியை வீழ்த்திய பேஷ்வா படையின் வெற்றியை கொண்டாடும் விதமாக 200வது பீமா கோரேகான் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் தான் வன்முறை வெடித்து, தலித் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஹைகோர்ட் தலைமை நீதிபதி தலைமையில்

ஹைகோர்ட் தலைமை நீதிபதி தலைமையில்

கோரேகான் போர் நினைவிடத்தை நோக்கி மக்கள் பேரணியாக சென்ற போது இந்து ஏக்தா அகாதி அமைப்பினர் அவர்கள் மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். முதல்வர் ஃபட்நாவிஸ் உத்தரவிட்ட நீதி விசாரணையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மும்பையிலும் போராட்டம்

மும்பையிலும் போராட்டம்

புனேவில் நேற்று நடந்த கலவரத்தால் மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் இன்று போராட்டம் நடைபெற்றது. மும்பை மற்றும அதன் புறநகர்ப் பகுதிகளில் ரயில் மறியல் போராட்டமும் அரங்கேறியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DR. Ambedkar's grandson Prakash ambedkar calls for shutdown at Maharashtra tomorrow to condemn the state government fails to control the violence against dalits.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற