மும்பை பாந்த்ராவில் குடிநீர் குழாய் உடைப்பு... பாட புத்தகங்கள், ஆவணங்களை இழந்து தமிழர்கள் தவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை பாந்த்ராவில் குடிநீர் குழாய் உடைந்ததில் தமிழர்களின் உடைமைகள் சேதமடைந்துள்ளதால் அரசின் உதவியை நாடியுள்ளனர்.

மும்பை பாந்த்ரா டெர்மினஸ் எதிரே உள்ளது இந்திரா நகர். இங்கு 92 ஆண்டுகளுக்கு முன்பு அமைகக்கப்பட்ட ராட்சத குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. இது கடந்த 2 நாள்களுக்கு முன் நீரின் அழுத்தம் காரணமாக உடைந்தது.

இதனால் தண்ணீர் மிகவும் வேகமாக பீய்ச்சி வெளியேறியது. அப்போது தண்ணீர் குழாய் அருகே விளையாடி கொண்டிருந்த பிரியங்கா (9), அவரது சகோதரர் விக்னேஷ் (8 மாதம்) ஆகியோர் தண்ணீரின் வேகத்தில் தூக்கிவிசப்பட்டனர்.

 இருவரும் இறந்தனர்

இருவரும் இறந்தனர்

இதனால் இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

 வெள்ளம் சூழ்ந்தது

வெள்ளம் சூழ்ந்தது

குடிநீர் குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் அந்த பகுதியில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் வீடுகளில் இருந்த பொருள்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.

 முக்கிய ஆவணங்கள்

முக்கிய ஆவணங்கள்

டிவி உள்ளிட்ட பொருள்களும் சேதமடைந்தன. ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் அடித்து செல்லப்பட்டன. இதை போல், பள்ளி மாணவர்களின் புத்தகங்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மாற்று துணிகூட இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Rainy Clouds Decreasing Heavily Across India
 அரசே உதவுங்கள்

அரசே உதவுங்கள்

இதுகுறித்து தமிழர்கள் சிலர் கூறுகையில், தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறு போல் ஓடியதால் எங்கள் உடைமைகளை இழந்துவிட்டோம். முக்கிய ஆவணங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மாணவர்களின் பள்ளிப் புத்தகங்களும் தண்ணீரில் சென்றுவிட்டன. சிலவற்றை மட்டும் எடுத்து காயவைத்து வருகிறோம். எனவே மாநில அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதோடு ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்க உதவி புரிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 92 years old tank was broken down due to the water pressure. Water released from that and surrounded in nearby areas like flood. Government proofs, text books was washed away from water.
Please Wait while comments are loading...