ஜம்முவில் ட்ரோன்கள் பறக்க தடை... முதல் முறையாக புதிய முறை அட்டாக்.. ராணுவம் உஷார்நிலை
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் எல்லையில் உள்ள மாவட்டமான ராஜூரி பிராந்தியத்தில் ட்ரோன்கள் மற்றும் சிறிய வகை பறக்கும் பொருட்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த ட்ரோன்கள் ஜம்முவில் உள்ள இராணுவ நிலைகளுககு எதிராக தாக்குதல் நடத்தியதால் ட்ரான்களக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜோரியின் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.கே.சவன் பிறப்பித்த உத்தரவில், , மேப்பிங், கணக்கெடுப்புகள் மற்றும் கண்காணிப்புக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் அரசு நிறுவனங்கள் முதலில் உள்ளூர் காவல் நிலைய பொறுப்பாளர் மற்றும் நிர்வாக அதிகாரிகள் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படை அதிரடி
ஞாயிற்றுக்கிழமை, ஜம்முவில் உள்ள கலுச்சக் இராணுவத் தளத்தின் இந்திய விமானப்படை நிலையத்தில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் மூலம் 6 நிமிடங்களுக்குள் இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர். ஒரு கட்டிடம் சேதம் அடைந்தது. இதுபோன்ற மற்றொரு தாக்குதல் அடுத்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினரால் தடுக்கப்பட்டது,

ட்ரோன்கள் மூலம் தாக்குதல்
நாட்டில் ராணுவ தளங்களின் மீதான தாக்குதலில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ட்ரோன்களைப் பயன்படுத்தி ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்கள் மற்றும் பணத்தையும் போட்டு பயங்கரவாதத்தைத் தூண்டுவது போன்று பல சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துள்ளன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலைக் குறிக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்கா கோபம்
தாக்குதல்களை நடத்துவதற்கு ஒரு சிறிய ட்ரோனைப் பயன்படுத்துவது பாதுகாப்பு ஆய்வாளர்களால் இந்தியாவில் இதுவரை நடந்தது இல்லை. ஆனால் பல ஆண்டுகளாக ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள படைகளை குறிவைக்க ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரால் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனால் அமெரிக்கா "கொலைகார தேனீக்கள்" என்று அழைத்தது. இதை தடுத்து நிறுத்தும் ஆராய்ச்சிக்கு பல மில்லியன் டாலர்களை செலவிட்டது.

புதியஅச்சுறுத்தல்
ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் ஜம்மு விமானப்படை நிலையத்தில் ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) இயக்கத்திற்கு பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ராணுவ நிலைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள முழு எச்சரிக்கையை கடைப்பிடிக்குமாறு ராணுவத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications