For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதற்ற பள்ளத்தாக்கு.. எட்டாவது முறையாக ஆளுநர் ஆட்சியின்கீழ் ஜம்மு காஷ்மீர்!

ஜம்மு காஷ்மீரில் எட்டாவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆளுநர் வோராவின் நான்காவது முறை ஆட்சி ஆகும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜம்மு-காஷ்மீர்: ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது- வீடியோ

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தலைவரால் எட்டாவது முறையாக நேற்று ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆளுநர் வோராவின் நான்காவது ஆளுநர் ஆட்சி ஆகும்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவந்த மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பபெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சிக்கு உத்தரவிட்டார்.

    இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், ஜம்மு காஷ்மீர் இதுவரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதோடு எட்டாவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தற்போதைய ஆளுநர் என்.என்.வோராவின் ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளது. இது வோராவின் நான்காவது முறை ஆளுநர் ஆட்சி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான வோரா ஜூன் 25 ஆம் தேதி 2008 ஆம் ஆண்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல்முறை

    முதல்முறை

    ஜம்மு காஷ்மீரில் முதன் முதலாக மார்ச் 26 ஆம் தேதி 1977 ஆம் ஆண்டு ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, இந்திரா காந்தியின் ஆதரவோடு, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேய்க் முஹமது அப்துல்லா முதல்வராக இருந்தார்.அப்போது, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி, ஷேய்க் முஹமது அப்துல்லா அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து, அப்போது ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்த எல்.கே.ஜாவின் தலைமையில் ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

    இரண்டு

    இரண்டு

    இதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் மார்ச் மாதம் 1986 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, சயீத் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் குலாம் முஹமது ஷா அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. குலாம் முஹமது ஷா தன்னுடைய மைத்துனர் ஃபரூக் அப்துல்லாவை எதிர்த்து தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, 246 நாட்கள் ஆளுநர் ஆட்சிக்குப் பிறகு ஃபரூக் அப்துல்லா ஆட்சிக்கு வந்தார். அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார்.

    மூன்றாவது முறை

    மூன்றாவது முறை

    ஜம்மு காஷ்மீரில் மார்ச் மாதம் 1990 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, ஆளுநராக இருந்த ஜெக்மோகன் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் தீவிரவாதம் அதிகம் தலைதூக்கிய நிலையில், ஃபரூக் அப்துல்லா பதவியை ராஜினாமா செய்தார்.அந்த நேரத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் சயீத் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். அவர் ஜெக்மோகன் ஆளுநராக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஃபரூக் அப்துல்லாவின் எதிர்ப்பை புறம் தள்ளினார். இந்த முறை அமல்படுத்தபப்ட்ட ஆளுநர் ஆட்சிதான் ஜம்மு காஷ்மீரில் மிக நீண்ட நாள் நடைபெற்ற ஆளுநர் ஆட்சி ஆகும்.

    நான்காவது

    நான்காவது

    இதையடுத்து, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் 2002 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நான்காவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால், ஃபரூக் அப்துல்லாவும் மாநிலத்தில் காபந்து அரசமைக்க மறுத்துவிட்டதால் ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, 15 நாட்கள் மட்டுமே ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. சயீத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, தேர்தலில் 16 இடங்களை மட்டுமே வெற்றி பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. சயீத் முதலமைச்சாராக பதவியேற்றார். இந்த 15 நாள்தான் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைமுறையில் இருந்த நாட்களில் மிகக் குறைந்த நாட்கள் ஆகும்.

    ஐந்து

    ஐந்து

    இதைத்தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முறை 174 நாட்கள் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. அப்போது, ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு மக்கள் ஜனநாயக கட்சி அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மக்கள் ஜனநாயக் கட்சி ஜூன் 28 ஆம் தேதி 2008 ஆம் ஆண்டு குலாம் நபி ஆசாத் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதால், அமர்நாத் யாத்திரையின் போது பெரிய அளவில் போராட்டம் பரவியது. அப்போதுதான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு எதிராக இந்து பெரும்பான்மை ஜம்முவின் குரல் எழுந்தது.

    ஆறு

    ஆறு

    அப்போது, குலாம் நபி ஆசாத் ஜூலை 7 ஆம் தேதி 2008 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும்பான்மையை எதிர்பார்த்தார். ஆனாலும் அவர் ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு, ஜனவரி 5 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு ஜம்முவில் ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த முறை அமல்படுத்தப்பட்டதுதான் ஆளுநர் வோராவின் முதல் ஆளுநர் ஆட்சி. அதன் பிறகு தேசிய காங்கிரஸ் தலைவர் ஒமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்றார். இவர்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் இளவயது முதல்வர்.இதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் டிசம்பர் 23 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. அதுமட்டுமில்லாமல் காபந்து முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லாவும் தன்னை பொறுப்புகளில் இருந்து விடுவிக்கும்படி ஜனவரி 7 ஆம் தேதி கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரில் ஆறாவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

    ஏழாவது

    ஏழாவது

    இதைத்தொடர்ந்து, மார்ச் 1 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு பாஜக மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்தது. இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக முஃப்தி சயீத் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வந்தது.இதையடுத்து, 2016 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஏழாவது முறையாக ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. இது ஆளுநர் வோராவின் மூன்றாவது முறை ஆளுநர் ஆட்சி ஆகும். அப்போது, வோராவின் மூன்றாவது முறை ஆளுநர் ஆட்சி ஒரு சாதனையாக இருக்கும் என்று ஒமர் அப்துல்லா குறிப்பிட்டார்.

    English summary
    President Ramnath Govind announced Governors rule in Jammu Kashmir, this is eighth time of governor rule in jammu Kashmir and fourth time of governor Vohra
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X