For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருட்டு ரயில் ஏறி வந்த ‘கவிஞர்’ தங்கபாலுவுக்கு எப்படி இவ்வளவு சொத்து...?: ஈவிகேஎஸ் கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: கவிஞராக இருந்த தங்கபாலுக்கு திடீரென எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தன, அவர் என்ன கண்ணதாசன் போல கவிதைகள் எழுதியா இத்தனை சொத்துக்களையும் சம்பாதித்தார் என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் தற்போதைய தலைவர் இளங்கோவனுக்கும், முன்னாள் தலைவர் தங்கபாலுவுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இளங்கோவனை கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும், என சிதம்பரம், தங்கபாலு, செல்லக்குமார் உள்ளிட்ட, 11 கோஷ்டி தலைவர்கள், டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணை தலைவர் ராகுலை சந்தித்து முறையிட்டுள்ளனர். இதையடுத்து, இளங்கோவனை அழைத்து, கட்சி மேலிடம் விளக்கம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக இளங்கோவனை நீக்கி விட்டு, புதிய தலைவராக தங்கபாலு நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் இளங்கோவன். அப்போது தங்கபாலுவின் சொத்து விவரங்களை பட்டியலிட்ட இளங்கோவன், அவருக்கு இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தது எப்படி என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அப்போது அவர் கூறியதாவது:-

என்னுடைய பதில்...

என்னுடைய பதில்...

என்னுடைய நேர்மை, ஒழுக்கம் பற்றி தங்கபாலு பேசி இருக்கிறார். தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி அவர் கூறியிருப்பதால் அதற்கு நானும் பதில் சொல்கிறேன்.

கவிஞர் தங்கபாலு...

கவிஞர் தங்கபாலு...

முதலில் இந்த தங்கபாலு யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்கு வருவதற்கு முன்பு இவர் 'கவிஞர் தங்கபாலு' என்று இருந்தார்.

கட்சிப் பதவிகள்...

கட்சிப் பதவிகள்...

டெல்லியில் உள்ள ரங்கராஜன் குமாரமங்கலம் வீட்டுக்கு இவர் முதன் முதலில் 'கவிஞர் தங்கபாலு' என்று சொல்லி கொண்டு தான் வந்தார். பிறகே அவருக்கு கட்சியில் பதவிகள் கிடைத்தன.

எனது நேர்மை...

எனது நேர்மை...

எனது நேர்மையைப் பற்றி தங்கபாலு சந்தேகம் எழுப்பியுள்ளார். எனது குடும்பம் எந்த அளவுக்கு சொத்து வைத்திருந்தது என்பது தமிழ்நாட்டில் உள்ள எல்லாருக்கும் தெரியும்.

ஆதாரங்கள் உள்ளது...

ஆதாரங்கள் உள்ளது...

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு எனக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தது? நான் அரசியலுக்கு வந்த பிறகு எவ்வளவு சொத்துக்கள் குறைந்தது என்பதை நான் ஆதாரப்பூர்வமாக வெளியிடத்தயாராக இருக்கிறேன். எனது சொத்துக்களே எனது நேர்மையை தெள்ளத்தெளிவாக சொல்லும். அதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

விளக்கம் அளிப்பாரா...?

விளக்கம் அளிப்பாரா...?

ஆனால் தங்கபாலு அரசியலுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தார்? அரசியலுக்கு வந்த பிறகு எவ்வளவு சொத்துக்களுடன் இருக்கிறார் என்பது பற்றி விளக்கம் வெளியிடத்தயாரா?

கவிதைகள் எழுதி சம்பாதித்தாரா?

கவிதைகள் எழுதி சம்பாதித்தாரா?

கவிஞர் தங்கபாலுக்கு திடீரென எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தன? அவர் என்ன கண்ணதாசன் போல கவிதைகள் எழுதியா இத்தனை சொத்துக்களையும் சம்பாதித்தார்?

திருட்டு ரயில்...

திருட்டு ரயில்...

சேலத்தில் இருந்து அவர் திருட்டு ரயில் ஏறித்தான் சென்னை வந்தார். அப்படி வந்தவருக்கு இன்று சென்னையில் சொந்தமாக பொறியியல் கல்லூரி உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுரங்கங்கள் உள்ளன.

புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு...

புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு...

கேரளாவிலும் கூட அவருக்கு சொத்துக்கள் உள்ளது. அது மட்டுமல்ல அவர் புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்.

உரிய நேரத்தில் வெளியிடுவேன்...

உரிய நேரத்தில் வெளியிடுவேன்...

அவருக்கு நெருக்கமான முருகானந்தம் என்பவர் இதற்கான ஆதாரங்களை எல்லாம் என்னிடம் கொடுத்துள்ளார். தேவையெனில் அவற்றை உரிய நேரத்தில் வெளியிட நான் தயாராக இருக்கிறேன்.

மனைவியையே ஏமாற்றினார்...

மனைவியையே ஏமாற்றினார்...

என்னுடைய நேர்மையை பற்றி மட்டுமல்ல ஒழுக்கம் பற்றியும் தங்கபாலு பேசியுள்ளார். இவர் எந்த அளவுக்கு ஒழுக்கமானவர் என்பதற்கு பல நிகழ்வுகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் அவர் தனது மனைவியையே ஏமாற்றினார். இதுபற்றி கூட நான் விரிவாக பேச தயாராக உள்ளேன்.

விவாவதத்திற்கு தயார்...

விவாவதத்திற்கு தயார்...

எனவே எனது நேர்மை, ஒழுக்கம் பற்றி இனியும் தங்கபாலு பேச தயாராக இருந்தால் நானும் விவாதிக்க தயாராக உள்ளேன். அவர் தயாரா?

கார்த்தி சிதம்பரம்...

கார்த்தி சிதம்பரம்...

கார்த்தி சிதம்பரம், என்னை பற்றி புகார் செய்கிறார். அவரை, ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தொண்டர்களை மட்டுமே நம்பி, கட்சி நடத்துகிறேன். அரசுக்கு எதிராக, பல போராட்டங்களை நடத்தி வருகிறேன்; அது, பிடிக்கவில்லை.

பதவி விலகத் தயார்...

பதவி விலகத் தயார்...

என் பணி செம்மையாக இல்லை என, சோனியா கருதினால், பதவி விலக தயார். இந்த பதவி, நான் கேட்டுப் பெற்றதல்ல; எனவே, இது எனக்கு பெரிதல்ல" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
E.V.K.S Elangovan says that Thangabalu don't have rights to speak about discipline.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X