For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2018 மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீத மின்வசதி - பட்ஜெட்டில் ஜெட்லி

பிரதமரின் கிராம மேம்பாட்டு வளர்ச்சி திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறிய அருண் ஜெட்லி, வரும் 2018ஆம் ஆண்டு மே 1ஆம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீத மின்வசதி செய்து தரப்படும் என்று அற

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு கிராமப்புற வளர்ச்சியே முக்கியம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய ஜெட்லி, 2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி செய்யப்படும் என்றார்.

லோக்சபாவில் 2017 -18ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், நடப்பு பட்ஜெட்டில் கிராமபுற வளர்ச்சிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை தெரிவித்தார்.

Electricity in every Indian village by May 2018: Arun Jaitley

கிராமப்புற வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள்:

•கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு

•கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு

•1 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து நீக்க இலக்கு

•2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும்

•கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு

•ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு

•கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி

•மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரு.48,000 கோடி ஒதுக்கீடு.

•கிராமப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு கடன் வட்டி குறைக்கப்படும்.

•கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

•100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பெண்களின் பங்கு 55 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

• இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே இலக்கு

• பிரதான் மந்திரி கிராம்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

•வரும் மார்ச் 2018க்குள் அனைத்து கிராமப்புறங்களிலும் மின் வசதி செய்து தரப்படும்.

•நாடு முழுவதும் ப்ளூரைடு பாதிப்புள்ள 28,000 குடிநீர் ஆதாரங்கள் அடுத்த 4 ஆண்டுகளில் சுத்தப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்.

• கிராமப்புற சுகாதாரம் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

•கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிட பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

English summary
Finance Minister Arun Jaitley on Wednesday said the government will work to ensure all the villages in the country have electricity on May 1,2018.Finance Minister Arun Jaitley presenting the Union Budget 2017 at Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X